சினேகாவின் அறிமுகம்:
90-களில் ரசிகர்கள் மனதை ஆட்சி செய்த முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் சினேகா. தெலுங்கு மொழியை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தில் பிறந்த சினேகா, ஹீரோயினாக அறிமுகமானது மலையாள திரைப்படம் மூலமாக தான். 2000-ஆம் ஆண்டு குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற, 'இங்கனே ஒரு நிலபக்ஷி' என்கிற படத்தின் மூலமாக தான் தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கினார்.
கைகொடுத்த ஆனந்தம்:
இதை தொடர்ந்து அதே ஆண்டு, இயக்குனர் ஜே.சுரேஷ் என்பவர் இயக்கத்தில் மாதவன் ஹீரோவாக நடித்த 'என்னவளே' படத்தில் நடித்தார். இந்த படத்தின் தோல்வியால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்படாத சினேகா, இந்த படத்திற்கு பின்னர் மம்மூட்டி, முரளி, தேவயானி, ரம்பா, ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான, ஆனந்தம் படத்தில் அபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மிகவும் அமைதியாக, பார்ப்பதற்கு பக்கத்துக்கு வீட்டு பெண்ணின் தோற்றத்தில் காணப்பட்ட இவருக்கு 'ஆனந்தம்' படம் சிறந்த அறிமுகத்தை ஏற்படுத்தி கொண்டது.

3 ஆண்டுகள் படு பிசி:
'ஆனந்தம்' படத்தின் வெற்றிக்கு பிறகு, தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனக்கு பொருந்த கூடிய வேடங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க துவங்கினார். 2002, 2003,2004 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மொழியில் ஏராளமான படங்களில் நடித்ததால், மற்ற மொழி படங்களுக்கு சினேகா பெரிதாக கவனம் செலுத்தவில்லை. கமல்ஹாசனுடன் நடித்த பம்மல் கே சம்மந்தம் முதல், சூர்யாவுடன் உன்னை நினைத்து, பிரசாந்துடன் விரும்புகிறேன், விக்ரம் ஜோடியாக கிங், தளபதிக்கு ஜோடியாக வசீகரா என ஓய்வில்லாமல் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார்.
நடிகர் பிரசன்னாவுடன் காதல் திருமணம்:
அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் சில முன்னணி நடிகர்கள் படங்களில் சினேகா நடித்து வந்தார். முன்னணி நடிகையாக இருக்கும் போதே சில காதல் தோல்விகளை சந்தித்த சினேகா, அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த சமயத்தில் தான் அவரின் கணவர் பிரசன்னாவை காதலிக்க துவங்கினார். இந்த படம் தோல்வி அடைந்தாலும், சினேகா - பிரசன்னா காதல் வெற்றி கண்டது . 2014-ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட, இவருக்கு விஹான் என்கிற மகனும் ஆத்யாந்தா என்கிற மகளும் உள்ளனர்.
சினேகா - பிரசன்னா சொத்து மதிப்பு:
திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னரும் கூட, சின்னத்திரை டான்ஸ் நிகழ்ச்சி, திரைப்படம், விளம்பர படங்கள் மூலம் கை நிறைய காசு பார்க்கும் சினேகா, அவரின் கணவர் பிரசன்னாவை விட 3 மடங்கு சொத்துக்கு அதிபதி என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் சினேகாவின் சொத்து மதிப்பு சுமார் 45 முதல் 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
இவருக்கு சொந்தமாக சென்னையில் சில வீடுகள் உள்ளன. சென்னையில் உள்ள முக்கிய பகுதியில் சினேஹாலயா என்கிற பட்டு புடவைகளின் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளார். தான் நடிக்கும் படங்களுக்கு ரூ .1 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். ஆனால் பிரசன்னா தான் நடிக்கும் படங்களுக்கு 50 லட்சம் தான் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. இதை தவிர, சொத்து மதிப்பிலும் மிகவும் குறைவாகவே உள்ளார்.
தகவலின் படி, பிரசன்னாவின் சொத்து மதிப்பு 10 முதல் 15 கோடி வரை தான் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் சினேகா பிரசன்னாவை விட 3 மடங்கு சொத்துக்கு அதிபதியாக உள்ளார்.