லோகேஷ் கனகராஜ்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171 படத்தின் டைட்டில் கடந்த சில நாட்கள் முன்பு வெளியிடப் பட்டது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கூலி என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது. தனது ஒவ்வொரு படத்தின் டைட்டிலையும் தனியாக ப்ரோமோ வீடியோக்கள் வழியாக வெளியிடுவது லோகேஷ் கனகராஜின் வழக்கம். கமல் நடித்த விக்ரம் . விஜய் நடித்த லியோ தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி ஆகிய மூன்று படங்களுக்கும் இந்த ட்ரெண்டை அவர் பின்பற்றினார். தற்போது வெளியாகியுள்ள ரஜினியின் கூலி படத்தின் டைட்டில் வீடியோ விக்ரம் மற்றும் லியோ ஆகிய இரு படங்களின் டைட்டில் வீடியோக்களைப் போல் ரசிகர்களை திருப்திபடுத்தியதா இல்லையா என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது. சில மற்ற இரு படங்களின் டைட்டில் வீடியோ அளவிற்கு கூலி டைட்டில் வீடியோ இல்லை என்று தெரிவித்து வருகிறார்கள்.


நடிகர் கார்த்திக் இன்ஸ்டாகிராம் பதிவு






இந்த விவாதத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் எல்லா ஸ்டார்களின் படங்களின் டீசரும் ஒரே மாதிரி இருப்பதாகவும் ஹீரோ வருவதை ஒரே மாதிரி பில்ட் அப் கொடுப்பதையே இந்த டீசர்கள் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி டீசர் வெளியாகும் போது ரசிகர்களாகிய நாம் அந்த வீடியோ நன்றாக இருப்பதாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 


ஷேர் செய்த வெங்கட் பிரபு






கார்த்திக் குமார் பகிர்ந்த இந்த வீடியோ இயக்குநர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் . கார்த்திக் இந்த வீடியோவில் பேசியது சமீபத்தில் வெளியான கூலி படத்தின் டைட்டில் டீசரை தான் என்றும் அது தெரிந்தும் வெங்கட் பிரபு இந்த பதிவை ஷேர் செய்திருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார். “ இந்த வீடியோவில் அவர் சொல்வது உண்மை தான். எங்களைப் போல் கமர்ஷியல் படங்கள் எடுப்பவர்களை பற்றிதான் அவர் சொல்கிறார். ஆனால் நாங்கள் ஏதாவது வித்தியாசமாக முயற்சி செய்தால் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்களா? “ என்று வெங்கட் பிரபு பதில் சொல்லியிருக்கிறார்