நேருக்கு நேர் சோனா, கில்லி புவி இப்படி பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நான்சி ஜெனிஃபரை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. 'டேய் பதிலை சொல்லுடா' என கில்லி படத்தில் நடிகர் விஜய் தங்கையாக அவரையே மிரட்டிய அந்த பொண்ணு இப்போ ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு தொழில் அதிபராகவும் கலக்கி வருகிறார். 

Continues below advertisement


விஜய்யின் ரீல் தங்கை:


ஒரு வயதில் சினிமாவில் அடியெடுத்து வைத்த ஜெனிஃபர் கடந்த 30 ஆண்டுகளாக முழுக்க முழுக்க சினிமாவில் கலக்கிய பின்னர் சின்னத்திரை பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்தினார். கடந்த ஆண்டு வெளியான 'ட்ரிப்' படத்தில் கூட நாம் ஜெனிஃபரை பார்த்து இருப்போம். 


 



சினிமாவில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக் கொண்டவர் தனது பிசினஸ் ஐடியாவில் கவனம் செலுத்த துவங்கினார். பல திரைப்பட வாய்ப்புகள் வந்த போதும் தனக்கு பிடித்த மாதிரியான கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் அவருடைய கவனம் முழுவதும் தனது பிசினஸ் பற்றி மட்டுமே இருக்கிறது. 


சோப் தயாரிப்பு:


'natures joy' என்ற பெயரில் கெமிக்கல் ஃப்ரீ பிராடெக்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். முதலில் அவர் அதை உபயோகித்து டெஸ்ட் செய்து பார்த்த பிறகே அதை மற்றவர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். ஒவ்வொருவரின் ஸ்கின் டைப் தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றாற் போல் தயாரித்து வருகிறார். சோப் மேக்கிங் பயிற்சிகளை கூட வீட்டில் இருந்த படியே கற்று கொடுத்து வருகிறாராம். 


சமீபத்தில் ஜெனிஃபர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு தனது பிசினஸ் பற்றின சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். சினிமாவை மட்டுமே நம்பி இருக்க முடியாது. அதற்காக சினிமாவை முழுமையாக விட்டுவிடவும்  முடியாது. நடிப்பதில் இருந்து எனக்கு கொஞ்சம் பிரேக் வேண்டும் என தோன்றியது. சிறுவயதில் இருந்தே எனக்கு என்னுடைய அப்பாவை போல பிசினஸ் மீது ஆர்வம் அதிகம். அதனால் தற்போது என்னுடைய கவனம் முழுவதும் பிசினஸ் பற்றி மட்டுமே இருக்கிறது என்றார். 


 



ட்ரிப் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை. கடந்த ஆண்டு அசிஸ்டன்ட் டைரக்டராக நான் கொஞ்ச காலம் வேலை செய்தேன். டைரக்ஷன் மீதும் எனக்கு ஆர்வம் அதிகம் இருக்கிறது. விஜய் சார் படங்களில் தங்கையாக மட்டும் இல்லை எந்த ஒரு நல்ல கேரக்டர் கொடுத்தாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். கில்லி படம் வெளியாகி கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் ஆனாலும், இன்றும் அது எனக்கு ஒரு அடையாளமாக இருக்கு. 


விஜய் சார் கூட நடிச்ச நேருக்கு நேர் படத்திற்காகவும் எனக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஸ்டேட் அவார்ட் கிடைச்சுது. விஜய் சார் எனக்கு எப்பவுமே ரொம்ப லக்கி. என்னைக்குமே நான் நடிப்பையும் விட மாட்டேன் என ஜாலியாக பேசி இருந்தார் ஜெனிஃபர்.