ஜிப்ரான் இசை.. வரலாற்றுப் போர்.. 'திரௌபதி 2' படத்தின் முக்கிய அப்டேட்ஸ் இதோ!
நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ளர 'திரெளபதி 2' திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி உள்ளது.

சென்னை: இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ளர 'திரெளபதி 2' திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்பொழுது அப்பிடத்திற்கான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
வரலாற்றுப் பின்னணியில் 'திரெளபதி 2'
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள 'திரெளபதி 2' திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகத் தயாராகியுள்ளது.
14-ஆம் நூற்றாண்டு வரலாற்று போர்
2020-இல் வெளியான 'திரெளபதி' திரைப்படம் சமகால சமூகப் பிரச்சினைகளைப் பேசிய நிலையில், அதன் இரண்டாம் பாகம் முற்றிலும் மாறுபட்ட வரலாற்றுப் பின்னணியில் (Period Film) உருவாகியுள்ளது. 14-ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவை ஆண்ட ஹொய்சால மன்னர் மூன்றாம் வீர வல்லாள மகாராஜா மற்றும் காடவராய மன்னர்களின் வீர வரலாற்றை இந்தப் படம் மையமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, முகலாயப் படையெடுப்பை எதிர்த்து மண்ணைக் காத்த மாவீரர்களின் கதையாக இது செதுக்கப்பட்டுள்ளது.
யாருக்கு எந்த கேரக்டர் ?
ரிச்சர்ட் ரிஷி வீரசிம்ம காடவராயர் எனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நட்டி (நடராஜ்) மூன்றாம் வீர வல்லாள மகாராஜாவாக கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். சிராக் ஜானி முகமது பின் துக்ளக் என்ற எதிர்மறைக் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். வேல ராமமூர்த்தி சம்புராயர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ரக்ஷனா இந்துசூடன், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
அட்டகாசம் செய்யும் ஜிப்ரானின் இசை!
இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிலிப் ஆர். சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தேவராஜ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் பிரம்மாண்டத்திற்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்மை குரலில் பாடல் வராது...
பாடல் பதிவு தொடர்பாக பாடகி சின்மயிக்கும் இயக்குநர் மோகன் ஜி-க்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தின. சின்மயியின் குரலை நீக்கிவிட்டு, புதிய குரலில் பாடலை வெளியிடுவதாக இயக்குநர் அறிவித்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இருப்பினும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே குறையவில்லை. குறிப்பாக சின்மையின் குரலை விட, அந்த பாடல் மேலும் மெருகூட்டும் விதமாக வேறு ஒரு பாடகி வைத்து பாடல் தயார் செய்யப்பட்டுள்ளது.
டிரெய்லர் மற்றும் படம் வெளியீடு
இப்படத்தின் அதிரடியான டிரெய்லர் மாலை வெளியானது. இப்படம் ஜனவரி 15, 2026 (பொங்கல் அன்று) உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குறிப்பாக, இதற்குமுன் இருந்த தொழில்நுட்பம் குறைகளை எல்லாம் சரிசெய்து புது முயற்சியாக இந்த படத்தை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்.





















