தமிழ் ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த தருணம் நடிகர் அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ''சில்லா சில்லா..." பாடலுக்காகவே. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. 



மூன்றாவது முறையாக ஸ்ட்ராங் கூட்டணி :


வலிமை, நேர்கொண்ட பார்வை படங்களை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் 'துணிவு'. மலையாள திரையுலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான். ஹைதராபாத், விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதியாக சென்னையில் நடைபெற்றது. ரசிகர்களை மகிழ்விப்பதற்காக அவ்வப்போது படம் குறித்த அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 


 



சஸ்பென்ஸ் வெளியானது :


அந்த வகையில் நேற்று காலை வெளியான அப்டேட்டின் படி சில்லா சில்லா பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் கொஞ்சம் தாமதமாக  6.30 மணிக்கு வெளியானது. இந்த பாடல் வரிகளை வைசாக் எழுத அஜித் பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார் ராக் ஸ்டார் அனிருத். ஐந்து வருடங்கள் கழித்து அஜித் குமாரின் படத்திற்காக அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் லிரிக்கல் விடியோவை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட்ட இசையமைப்பாளர் ஜிப்ரான் அதோடு சேர்த்து ஒரு நெகிழ்ச்சியான குறிப்பு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.


"சினிமாவில் எனது பயணத்தை தொடங்கி 4088 நாட்களுக்கு பிறகே நான் இந்த அற்புதமான அனுபவத்தை உணர்கிறேன் அதும் எனது 50வது திரைப்படத்தில். அஜித் சார் மீது இருக்கும் அன்பு என் வாழக்கையிலும் பரவியுள்ளது. உங்களில் ஒருவனான நானும் இதற்கு நியாயம் செய்துள்ளேன் என நம்புகிறேன். சில்லா சில்லா இனிமேல் உங்களுடையது !!! என நெகிழ்ச்சியுடன் ஒரு குறிப்பை பகிர்ந்துள்ளார். 


 






 


பாட்டுக்கே இப்படின்னா படத்துக்கு ?


துணிவு படத்தின் பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த ரெஸ்பான்ஸ் இருக்கே அடேங்கப்பா!!! படமே வெளியானது போல ஆட்டம் பட்டம் என கொண்டாடி தள்ளிவிட்டனர். பாட்டிற்கே இந்த கொண்டாட்டம் என்றால் படம் ரிலீசாகும் நாள் எப்படி இருக்கும் என யோசித்தாலே ஒரே பிரமிப்பாக இருக்கிறது.  






நேற்று மாலை வெளியான சில்லா சில்லா பாடல் வெளியாகி முழுமையாக ஒரு நாள் கூட ஆகாத நிலையில் 1 மில்லியன் லைக்ஸ்களை குவித்து யூடியூபில் சாதனை படைத்துள்ளது. ரசிகர்கள் அஜித் குமாரின் படத்தையும் பாடலையும் எந்த அளவிற்கு கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.