இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவர் இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றவை. அவரது முதல் படமான ஜென்டில்மேன் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இயக்குனர் ஷங்கர் யார் என்று திரும்பி பார்க்க வைத்த படமாகவும் அது அமைந்தது.
இந்த நிலையில், 1993ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் இந்த படத்திற்கு நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதில் நடிக்க இருப்பது மலையாள சினிமாவைச் சேர்ந்த நயன்தாரா சக்ரவர்த்தி என்ற தகவல் உறுதியாகியுள்ளது.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், இப்போது ஜென்டில்மேன் 2-ல் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும், படத்தின் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கரின் தவிர்க்க முடியாத படமான ஜென்டில்மேன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் குஞ்சுமோனே இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார். ஆனால், ஜென்டில்மேனை இயக்கிய ஷங்கரே இந்த படத்தை இயக்குவாரா? அல்லது வேறு யாரேனும் இயக்க உள்ளனரா? போன்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ஜென்டில்மேன் 2ம் பாகம் படத்திற்கு இந்திய சினிமாவின் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்திற்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி இசையமைக்க உள்ளார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்