பொதுவாக அசைவ உணவுகளோ, முட்டையோ இல்லாமல்  தற்போது இருக்கும் குழந்தைகளுக்கு உணவு என்பது வாய்க்குள் செல்லாது. தற்போது சில செலிப்ரிட்டி தாய்மார்கள் அசைவ உணவுகளை விட சைவ உணவுகளை விரும்பி சமைக்கும் தன்மைக்கு வந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். பெரும்பாலானோர் தற்போது ஊட்டச்சத்துக்களை அதிகம் விரும்பி நாடி உள்ளதாலும், நோய்கள் ஏற்படுவதை முன்கூட்டியே தவிர்க்க விரும்புவதாலும் தாவர உணவுகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிப்பது அவதானிக்க கூடியதாக இருக்கிறது.


 அசைவ உணவுகளை பெரும்பாலானோர் விரும்பினாலும் வீடுகளில் சைவ உணவுகள் அதிக அளவில் செய்யப்படுவதை கவனிக்க கூடியதாகவே இருக்கிறது. அந்த வகையில் பிரபல நடிகையான ஜெனிலியா தனது குழந்தைகளுக்கு வீட்டில் முட்டையில்லாமல் ஆம்லெட் செய்து கொடுத்திருக்கிறார் .அது எவ்வாறெனில் தாவரங்கள், பருப்பு தானிய வகைகளை சேர்த்து இந்த ஆம்லெட்டை செய்து குழந்தைகளுக்கு வழங்கியிருக்கிறார்.


அது குறித்து தனது சமூக வலைதள பக்கத்திலும் அவர் இந்த முட்டையில்லாத ஆம்லெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். 


தற்போது உலக அளவில் தாவர அடிப்படையிலான உணவு முறை செலிப்ரிட்டிகள் மத்தியிலும் பரவத் தொடங்கி இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சிலர் முழுமையாக காய்கறி உணவுகள் மட்டுமே உண்ணும் முறைக்கு மாறியுள்ளனர். இது டயட்டாக இருக்கலாம், உடல் குறைப்பு நடைமுறையாக இருக்கலாம் அல்லது அசைவத்தை விரும்பாதவர்களாக இருக்கலாம், புதிதாக காய்கறிகளை மட்டுமே உண்ணலாம் என்ற ஒரு நோக்கத்தில் வந்தவர்களாக கூட இருக்கலாம் இவ்வாறு அசைவத்தை விட்டு விலகி சைவ உணவில் நாட்டம் கொள்வது என்பது அதிகரித்திருக்கிறது.


தனியாக தாவர உணவுகளை விரும்பி உண்ணுவோருக்காக  பிரத்யேகமாக தாவர இறைச்சி போன்ற உணவுகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் வந்துள்ளது. தற்போது இந்தியாவிலும் இந்த தாவர உணவு பழக்கம் செலிப்ரிட்டிகள் மத்தியது என்பது அதிகரித்து உள்ளது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில்  நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவரும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் இந்த தாவர வகை உணவு முறையை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. 


ஜெனிலியா தம்பதி, அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தாவர உணவு வகைகள் குறித்த வீடியோக்களை பதிவேற்றம் செய்து அதுக் குறித்த விழிப்புணர்வையும்  ஏற்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாவர உணவில் ஆம்லெட் போட முடியாது என கூறியவர்கள் யார்? என கேள்வி எழுப்பி உள்ள ஜெனிலியா இதை முயற்சி செய்து பாருங்கள் என அவர் பகிர்ந்து உள்ள ஆம்லெட் படத்துடன் பதிவு செய்துள்ளார். கேரட் ,வெங்காயம் ,குடைமிளகாய், பருப்பு போன்ற காய்கறிகள் மற்றும் மசாலாவை சேர்த்து சுவையான ஆம்லெட்டை ஜெனிலியா தயாரித்திருக்கிறார்.


தான் செய்த முட்டை இல்லா ஆம்லெட்டை தனது குழந்தைகளுக்கு உண்ணக் கொடுத்துள்ள ஜெனிலியா அவர்கள் அதை எவ்வாறு உண்ணுகிறார்கள் ,எத்தனை முறை உண்ணுகிறார்கள் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். தனது குழந்தைகள் மீண்டும் இரண்டாவது முறையும் விரும்பி கேட்டு வாங்கி உண்டதாக அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.


தேவையான பொருட்கள்:


மஞ்சள் பாசிப்பருப்பு தோல் நீக்கியது – 1 1/2 கப்


உப்பு – தேவையான அளவு


வெங்காயம் – 2


கேரட் துருவல் – 1


கொத்தமல்லி – கொஞ்சம்


குடை மிளகாய் – 1/2


சோடா உப்பு – தேவையான அளவு


மிளகு சீரகம் – தேவையான அளவு


பெருங்காய தூள் – கொஞ்சம்


இஞ்சி விழுது – கொஞ்சம்


செய்முறை


இவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து முட்டையில்லா தாவர ஆம்லெட் செய்வது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. ஆகவே நீங்களும் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்த தாவர ஆம்லெட்டை பழக்கப்படுத்தி நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கி குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள் என்றும் கூறியுள்ளார்.