தென்னிந்திய சினிமாவின் ஆல் டைம் கியூட் கியூட் கியூடெஸ்ட் நடிகை என்றால் அது நடிகை ஜெனிலியா தான். இது வரையில் நடித்த அத்தனை படத்திலேயும் மிகவும் ஸ்வீட்டான ஒரு பப்ளி நடிகையாகவே  நடித்துள்ள  ஜெனிலியாவின் 36வது பிறந்தநாள் இன்று. ஹேப்பி பர்த்டே ஸ்வீட்டி !


 



சினிமாவில் நுழைந்த கதை :


2003ம் ஆண்டு வெளியான 'துஜே மேரி கசம்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைதுறையில் அறிமுகமானார். இப்படத்தில் நடிக்கவே முடியாது என அடம் பிடித்தவரை இயக்குநர் விடாப்பிடியான ஃபாலோ செய்து நடிக்க சம்மதம் வாங்கியுள்ளார். அதிலும் அப்படத்தின் தெலுங்கு வர்ஷன் படத்தை பார்த்த பிறகு தான் ஓகே சொன்னாராம்.


மூன்று மொழிகளில் அறிமுகம் :


முதல் முதலில் நடிகை ஜெனிலியா நடிகர் அமிதாப் பச்சனுடன் பார்க்கர் விளம்பர படத்தில் நடித்திருந்தார். அதை பார்த்து தான் இயக்குநர் ஷங்கர் இவரை 'பாய்ஸ்' படத்திற்காக செலக்ட் செய்த்துள்ளார். அதே நேரத்தில் தான் தெலுங்கில் 'சத்யம்' திரைப்படத்தில் அறிமுகமானார். ஒரே நேரத்தில் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் அறிமுகமானார் நடிகை ஜெனிலியா.


 



மாடலிங் மீது காதல் :


ஜெனிலியாவுக்கு படத்தில் நடிக்க தான் பிடிக்காதாம் மற்றபடி காலேஜ் படிக்கும் போதிலிருந்தே மாடலிங் மீது தீவிர ஆசை கொண்டு இருந்தாராம். தனது 15 வயதிலேயே மாடலிங் துறையில் சேர்ந்துள்ளார்.  சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் தேசிய அளவிலான கால்பந்து வீராங்கனையாக இருந்துள்ளார் ஜெனிலியா.


சூப்பர் ஹிட் மூவிஸ் :


அதை தொடர்ந்து ஜெனிலியா காட்டில் எக்கச்சக்கமான படங்கள் மழையென பொழிய தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியான நடிகையானார். 2006ம் ஆண்டு 'பொம்மரிலு' என்ற தெலுங்கு படத்தில்  மீண்டும் நடிகர் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்தார். அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமாக அமைந்தது. அப்படம் தான் பின்னர் 2008ம் ஆண்டு தமிழில் வெளியான சூப்பர் ஹிட் படம் 'சந்தோஷ் சுப்ரமணியம்'. அந்த படம் வெளியானது முதல் இளைஞர்கள் அனைவரும் ஜெனிலியா மாதிரி பொண்ணு தான் எனக்கு வேணும் என அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த அளவுக்கு அனைவரின் கியூட் கனவு கன்னியானார் ஜெனிலியா. மிகவும் சக்சஸ்ஃபுல் நடிகையாக இருந்த ஜெனிலியா திடீரென தனது காதலர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு நடிப்பதற்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டார்.


 



நடிப்புக்கு  பிரேக் :


ஜெனிலியா தமிழில் நடித்த கடைசி படம் 'வேலாயுதம்'. அதற்கு பிறகு அவர் நடிப்பதில் இருந்து மட்டுமே விலகினாலும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். பத்து ஆண்டுகளுக்கு பிறகு நடிப்பில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் இணைந்து மராத்தியில் 'வேத்' என்ற படத்தில் நடித்து இருந்தார். அப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானது.  


லிம்கா சாதனை :


ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளிலும் பேக் டு பேக் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து லிம்கா உலக சாதனை படைத்துள்ளார். தெலுங்கில் - ரெடி, தமிழில் - சந்தோஷ் சுப்பிரமணியம், கன்னடத்தில் - சத்யா இன் லவ் மற்றும் ஹிந்தியில் - ஜானே து... யா ஜானே நா என நான்கு சூப்பர் ஹிட் படங்களில் கலக்கியுள்ளார் ஜெனிலியா என்பது குறிப்பிடத்தக்கது.


மீண்டும் இந்த கியூட்டியை தமிழ் ரசிகர்கள் ரசிக்க முடியாத என ஆர்வமாக காத்திருக்கின்றனர்.