ஜெனிலியா
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தொடர்ந்து சந்தோஷ் சுப்ரமணியம் , உத்தமபுத்திரன் , சச்சின் , வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இயக்குநர்களின் ஆசையோ என்னவோ தெரியவில்லை ஜெனிலியா நடித்த கதாபாத்திரங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை. இவர் நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் ஹாஸினி கதாபாத்திரம் பல பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவே மாறிவிட்டது.
ஒரு கட்டத்திற்குமேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஜெனிலியா மாதிரியான கதாபாத்திரங்களை வைத்து மீம்கள் வைரலாகத் தொடங்கின.
தமிழ் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தை உருவாக்கி வந்த ஜெனிலியா திடீரென்று திரைப்படங்களில் நடிப்பதை விட்டு திருமண வாழ்க்கைக்குள் புகுந்தார். பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதற்கு பின் அவர் திரைப்படங்களில் நடிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை உண்டாக்கியது.
பாலிவுட்டின் சிறந்த காதல் தம்பதி
பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் , தீபிகா படூகோன் ரன்வீர் சிங் , ஆலியா ரன்பீர் கபூர் , அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் என பல்வேறு தம்பதிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்துள்ளார்கள் . ஆனால் பெரும்பாலான பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் விவாகரத்துப் பெற இருப்பதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இப்படியான நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக திருமண உறவில் இருந்து வரும் ஜெனிலியா மற்றும் ரித்தேஷை ரசிகர்கள் தங்களது மனதிற்கு நெருக்கமான தம்பதிகளாக பாராட்டி வருகிறார்கள்.
சமூக வலைதளங்களில் கணவன் மனைவி சேர்ந்து வெளியிடும் ரீல்ஸ் அடிக்கடி வைரலாகி வருகின்றன.
ஜெனிலியா பிறந்தநாளுக்கு கணவர் பகிர்ந்த வீடியோ
இன்று ஜெனிலியா தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளையொட்டி கணவர் ரிதேஷ் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் கல்யாணத்திற்கு முன் பின் என இரண்டு கட்டங்களை வைத்து வீடியோ பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முன் ஒரு அழகான ரொமாண்டிக் பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்க இருவரும் அதற்கு நடனமாடுகிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு தனது மனைவி ஜெனிலியாவுக்கு கால் பிடித்துவிடுகிறார் ரித்தேஷ். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.