விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ள அங்கமமாள் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று அங்கீகாரம் பெற்ற இந்த படம் தற்போது தமிழ் ரசிகர்களிடையேயும் பெரியளவில் கவனமீர்த்துள்ளது. அங்கம்மாள் படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தைப் பற்றி சமூக வலைதளத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

Continues below advertisement

அங்கம்மாள் திரைப்பட விமர்சனம்

பெருமாள் முருகனின் 'கோடித்துனி' என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் அங்கம்மாள். பிறந்ததில் இருந்து ரவிக்கையே அணியாதவர் அங்கம்மாள். அவரது மகன் பவளமுத்து தங்களது கிராமத்திற்கு முதல் டாக்டராக வருகிறார். அதே நேரத்தில் நகரத்தில் வசிக்கும் உயர்ந்த குடும்பத்துப் பெண்ணை காதலிக்கிறார். பெண் வீட்டார் தனது வீட்டிற்கு வரும் போது தனது அம்மாவை ரவிக்கை இல்லாமல் பார்த்தால் அவமானமாக இருக்கும் என பவளமுத்து கருதுகிறான். இதனால் தனது அண்ணி சாரதாவுடன் சேர்ந்து எப்படியாவது அங்கம்மாளை ரவிக்கை அணிய சம்மதிக்க வைக்க நினைக்கிறான். யார் இந்த அங்கம்மாள் ? தனது மகனுக்காக அவர் ரவிக்கை அணிந்தாரா என்பதே அங்கம்மாள் படத்தின் கதை

குடும்பச் சூழலில் நுட்பமாக செயல்படும் ஆணாதிக்கம், உறவுகளுக்கு இடையேயான பாசம் , காதலை அங்கம்மாள் திரைப்பட தேர்ந்த நடிகர்கள் , சிறப்பாக எழுதப்பட்ட கதாபாத்திரங்களின் வழியாக சொல்கிறது