வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களும் மிகவும் பிரபலமான செலிபிரிட்டிகளாக இன்று வலம் வருகிறார்கள். இன்னும் சொல்ல போனால் வெள்ளித்திரை பிரபலங்களை காட்டிலும் சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்களுக்கு மிக நெருக்கமானவர்களாக, குடும்பத்தில் ஒருவராக கொண்டாடப்படுகிறார்கள். சோசியல் மீடியாவிலும் ஏராளமான ஃபேன் ஃபாலோவர்ஸ் கொண்டவர்களாக விளங்கும் சின்னத்திரை பிரபலங்களில் ஒருவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ். 


 



சின்னத்திரை வாய்ப்பு :


சீரியல்கள், டான்ஸ் ஷோ, ரியாலிட்டி ஷோ என அனைத்திலும் கலந்து கொண்டு பிரபலமானவராக இருப்பவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான 'தென்றல்' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் காயத்ரி. முதல் சீரியலிலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற காயத்ரிக்கு அடுத்தடுத்து பல சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. அழகி, பொன்னூஞ்சல், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், மெல்லத் திறந்தது கதவு, அரண்மனை கிளி, சித்தி 2 என ஏரளமான சீரியல்களில் நடித்துள்ளார். 


அழகான குடும்பம் :


டான்ஸ் மாஸ்டர் யுவராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார் காயத்ரி. இந்தத் தம்பதியினருக்கு ஏற்கெனவே ஒரு மகன் இருந்த நிலையில் இரண்டாவதாக சமீபத்தில் தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்களுடைய பெண் குழந்தைக்கு யுகா எனப் பெயர் சூட்டியுள்ளனர். யூடியூபிலும் காயத்ரி ஃப்ரம் அமிஞ்சிக்கரை என்ற பெயரில் சேனல் ஒன்றை வைத்துள்ளார். அதன் மூலம் ஏராளமான சப்ஸ்க்கரைபர்களை பெற்றுள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் போடும் புகைப்படங்களும், வீடியோக்களும் லைக்ஸ்களை அள்ளும். 


 



ரியாலிட்டி ஷோ வின்னர்ஸ் :


மிகவும் திறமையான நடிகை மட்டுமின்றி தம்பதிகளாக இவர்கள் கலந்து கொள்ளும் ரியாலிட்டி ஷோகளிலும் வெற்றியாளர்களாக ஜெயிப்பது காயத்ரி - யுவராஜ் தம்பதியின் ஸ்பெஷலிட்டி. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் டைட்டில் வின்னர் இவர்கள் தான். 


 






 


புதுமனை புகுவிழா :


கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் தான் குழந்தை பிறந்த குட் நியூஸ் சொன்ன காயத்ரி - யுவராஜ் தம்பதி தற்போது அடுத்ததாக ஒரு குட் நியூஸ் ஒன்றை அவர்களின் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இந்தத் தம்பதியினர் ஒரு அழகான வீடு ஒன்றை கட்டி முடித்து, தங்களின் புதுமனை புகுவிழா வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.  பூஜை, பால் காய்ச்சும் நிகழ்வு என அனைத்தையும் தனது ரசிகர்களுடன் அந்த வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார் காயத்ரி. அவரின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் காயத்ரிக்கும் யுவராஜூக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.