மேலும் அறிய

Gautham Vasudev Menon: கடனில் இருந்து மீள உதவிய விஜய் படம்.. நெகிழ்ச்சியில் கௌதம் மேனன்!

சில படங்களை சொந்தமாக தயாரித்த கௌதம் மேனன் கடனில் மாட்டிக் கொண்டார். அதனை சமாளிக்க நடிப்பில் களம் கண்ட அவர், கிடைத்த படத்தில் எல்லாம் முக்கியத்துவம் இல்லாத கேரக்டரில் எல்லாம் நடித்ததாக விமர்சிக்கப்பட்டது.

பொருளாதார பிரச்னையில் சிக்கி தவித்த தனக்கு விஜய் நடித்த படம் மிகப்பெரிய அளவில் உதவியதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். 

தமிழில் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், நீதானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு என   பல படங்களை இயக்கி தனக்கென தனியிடம் பிடித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். 

தனது படங்களில் ஒரு காட்சியில் தலைகாட்டி வந்த கௌதம் மேனன் ஒரு கட்டத்தில் கடுமையான பொருளாதார பிரச்னையில் சிக்கினார். சில படங்களை சொந்தமாக தயாரித்து கடனில் மாட்டிக் கொண்டார். இதனால் அவர் இயக்கிய படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிப்பில் களமிறங்கிய கௌதம் மேனனை சமூக வலைத்தளத்தில் கடுமையாக இணையவாசிகள் கலாய்த்தனர். கிடைத்த படத்தில் எல்லாம் முக்கியத்துவம் இல்லாத கேரக்டரில் எல்லாம் நடிக்கிறார். எவ்வளவு தான் கடனில் இருக்கிறீர்கள் என இணையத்தில் அவரை டேக் செய்து கேள்வியும் எழுப்பினர். 

இந்த நிலையில் கௌதம் மேனன் நடிகர் விக்ரமை வைத்து இயக்கிய துருவ நட்சத்திரம் படம் கடந்த சில ஆண்டுகளாவே ரிலீசுக்கு தயாராகியும் பொருளாதார பிரச்னை காரணமாக முடங்கி கிடக்கிறது. எப்படியாவது அந்த படத்தை வெளியிட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சினிமாவில் இன்னும் ஓடிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சி ஒருபக்கம் சென்று கொண்டிருக்கிறது. எப்படியாவது இந்த படம் வெளியாகும் என அவர் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், “என்னுடைய நிதிப் பிரச்னைகளை சமாளிக்கவே தான் பல படங்களில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். அப்படியாக நான் பணியாற்றிய படங்களில் விஜய் நடித்த லியோ படம் எனக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது. துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய யாரும் எனக்கு கைகொடுக்கவில்லை. துருவ நட்சத்திரம் சென்சார் பிரச்னை முடிவுக்கு வந்துள்ள நிலையில் இன்னும் ஒரு சின்ன பிரச்னை ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு சூர்யாவை ஹீரோவாக கொண்டு துருவ நட்சத்திரம் படம் அறிவிக்கப்பட்டது. அதன்பின் இப்படம் பல விவகாரங்களால் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விக்ரம் ஹீரோவாக நடித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

டிக்கெட் போட கூட ஆர்த்திகிட்டதான் காசு கேட்பேன்..மனைவியை மேடையில் புகழ்ந்த சிவகார்த்திகேயன்
டிக்கெட் போட கூட ஆர்த்திகிட்டதான் காசு கேட்பேன்..மனைவியை மேடையில் புகழ்ந்த சிவகார்த்திகேயன்
Lavanya Tripathi: குடும்பத்தை தப்பா பேசுறாங்க.. போலீசுக்கு சென்ற சசிகுமார் பட நடிகை!
Lavanya Tripathi: குடும்பத்தை தப்பா பேசுறாங்க.. போலீசுக்கு சென்ற சசிகுமார் பட நடிகை!
தாய்கிழவி படத்திற்கு வரிச்சலுகை தர வேண்டும்..முதலமைச்சர் ஸ்டாலினிடம் ராதிகா கோரிக்கை
தாய்கிழவி படத்திற்கு வரிச்சலுகை தர வேண்டும்..முதலமைச்சர் ஸ்டாலினிடம் ராதிகா கோரிக்கை
கமலை சந்திக்க வைத்த சிவகார்த்திகேயன்..மேடையில் கலங்கிய நடிகர் சிங்கம் புலி
கமலை சந்திக்க வைத்த சிவகார்த்திகேயன்..மேடையில் கலங்கிய நடிகர் சிங்கம் புலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
MDMK VAIKO : 4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Embed widget