தமிழ் திரையுலகின் மிகப்பெரிய இயக்குனர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் இவரும், வடிவேலுவும் இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிகழ்ச்சி மேடையில் நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சியும், நடிகர் வடிவேலுவும் இணைந்து மேடையில் இருந்தனர்.
அப்போது, அவர்களிடம் மாணவர்கள் சுந்தர் சி-யிடம் கேள்வி கேட்டனர். அப்போது, ஒரு மாணவி உன்னைத் தேடி தல அஜித் பற்றி கூறுங்கள் என்று கேள்வி எழுப்பினார். அப்போது அரங்கம் முழுவதும் கரகோஷம் எழுந்தது. சுந்தர் சி-யும் மகிழ்ச்சியில் சிரித்தார். வடிவேலுவும் மாணவர்களின் கரகோஷத்தை கேட்டு சிரித்தார்.
முகம் சுழித்தாரா வடிவேலு?
நீண்ட நேரம் கரகோஷம் அடங்காமல் இருந்த நிலையில் நடிகர் வடிவேலுவிடம் யாரு? யாரு? என்று கேட்க சுந்தர் சி அஜித் என்று கூறினார். உடனே வடிவேலுவின் முகத்தில் இருந்த சிரிப்பு மெளனமாக மாறியது. உடனே முகம் வாடிய வடிவேலு அமைதி ஆனார்.
அப்போது, பேசிய சுந்தர் சி, அப்போது அவர் தல-யாக உருவாகவில்லை. அப்போது தல-க்கான உருவாக்கத்தில் இருந்தார். நான் பண்ணும்போது அவருக்கு உடல்நலக்குறைவு இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார். நாம் கேசுவலாக நடப்போம். கால் வைக்கும்போது தரையைப் பார்த்தால்தான் தெரியும். அந்தளவுக்கு கஷ்டப்பட்டாரு. டான்ஸ் பண்ணி, ஃபைட் பண்ணி, மிகப்பெரிய உழைப்பாளி. அந்த உழைப்புதான் மக்கள் அன்போட அவரை இந்த இடத்துக்கு கொண்டு வந்து வச்சுருக்கு.
இவ்வாறு அவர் பேசினார்.
அஜித் - வடிவேலு இடையே என்ன பிரச்சினை?
சுந்தர் சி அஜித் பற்றி பேசும்போது மிகவும் இறுக்கமான முகத்துடன் வடிவேலு அருகில் நின்று கொண்டிருந்தார். அஜித், விஜய் வளர்ந்த காலகட்டத்தில் வடிவேலு இருவருடனும் இணைந்து நடித்தார். அப்போது, 2002ம் ஆண்டு அஜித்குமார் ராஜா என்ற படத்தில் நடித்தார்.
எழில் இயக்கிய இந்த படத்தில் அஜித்தின் நண்பராக வடிவேலு நடித்தார். அப்போது, அஜித்திற்கும் வடிவேலுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த படத்திற்கு பிறகு இத்தனை ஆண்டுகளாக அஜித் - வடிவேலு இணைந்து நடித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்பு இவர்கள் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க பல படங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் தோல்வியில் முடிந்ததாகவுமே கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அதன்பின்பு வெளியான அஜித் படங்களில் அவருடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் விவேக் நடித்திருப்பார். விவேக்கிற்கும் அஜித்திற்குமான நட்பு மிகவும் நெருக்கமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஜித் - வடிவேலு இணைந்து ஆசை, பவித்ரா, ஆனந்த பூங்காற்றே, ராஜா, தொடரும், மைனர் மாப்பிள்ளை, ராசி ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.