தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்த இயக்குனர் வி. கௌதமன். 1998ம் ஆண்டு நடிகர் முரளி - நடிகை சிம்ரன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'கனவே கலையாதே' திரைப்படத்தை இயக்கியவர் வி. கௌதமன். அதனை தொடர்ந்து 12 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு 2010ம் ஆண்டு நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'மகிழ்ச்சி' என்ற திரைப்படத்தை இயக்கினார். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இயக்குனராக ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார் இயக்குனர் வி. கௌதமன். V.K புரொடக்ஷன் குரூப் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல் வரிகளை எழுத இசைமைக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இப்படத்திற்கு 'மாவீரா' என தலைப்பிட்டுள்ளனர். படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேஜிக்கல் மொமெண்ட் இதுதானா :
இப்படத்திற்கு பாடல் இசைமைக்கும் ஒரு அழகிய தருணத்தின் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து. ஜி.வி. பிரகாஷ் இல்லத்தில் கவிஞர் வைரமுத்து, இயக்குனர் வி. கௌதமன் மூவரும் சேர்ந்து இருக்கும் இந்த வீடியோவில் வைரமுத்து பாடல் வரிகளை படிக்க அதை மிகவும் ரசிக்கின்றனர் இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர். ஜி.வி. ஒரு சிறிய திருத்தமாக பல்லவிகளை மற்றும் சற்று ஈர்க்கும் விதமாக மாற்றி 'வஞ்சிக்கொடியே வாடி - நீ வளத்த பொருளத் தாடி என்ற இந்த அழகான பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுத அதற்கு உடனே ஜி.வி இசையமைத்து அழகாக பாடியே காண்பித்துவிட்டார். பத்தே நிமிடத்தில் அழகான ஒரு பாடலுக்கு மெட்டமைத்து விட்டனர் இந்த கலைஞர்கள். வைரமுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ போஸ்ட் கமெண்ட்களையும் லைக்ஸ்களையும் குவித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுவருகிறது. ஒரு சில நிமிடங்களிலேயே வார்த்தைகளையும், மெட்டையும் வைத்து மேஜிக்கல் தருணமாக மாற்றிய இந்த இரு வித்தகர்களையும் மிஞ்ச முடியுமா என்ன? அதிலும் கவிஞர் வைரமுத்து வஞ்சிக்கொடி என்ற வார்த்தைக்கு கொடுத்த விளக்கங்கள் இருக்கே அப்பப்பா அருமை அருமை!
கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளில் இருக்கு அந்த உயிர் நாடி தான் அவரின் வார்த்தைகளுக்கு கிடைக்கும் வெற்றி. கடந்த சில வருடங்களாக இவரின் வரிகள் இல்லாமல் தவித்து வந்த திரை ரசிகர்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சியை 'மாவீரா' திரைப்படம் மூலம் கொடுத்துள்ளார். வார்த்தைகளில் ஜாலம் செய்யும் இந்த கவிஞரின் திறமையை எந்த ஒரு சர்ச்சையாலும் தடுத்து நிறுத்த முடியாது.