‛சியான் 60’ படக்குழுவினரோடு சந்தோஷ் நாராயணன் ஆடிய டான்ஸ் ‛வைரல்’

சியான் 60 படக்குழுவினரோடு சந்தோஷ் நாராயணன் ஆடிய நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

2009ம் ஆண்டு தெலுங்கு திரையுலகின் வழியாக திரையுலகில் இசைக்கலைஞராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன்.2012ம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் சந்தோஷ் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

Continues below advertisement

,2012ம் ஆண்டு இரண்டு படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய சந்தோஷ். இந்த 2021ம் ஆண்டு 10 திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 10 படங்களில் சார்பட்டா பரம்பரை, கர்ணன், ஜகமே தந்திரம் மற்றும் சியான் 60 ஆகிய படங்களும் அடக்கம். இந்நிலையில் சியான் 60 படக்குழுவோடு சந்தோஷ் நாராயண் ஆடிய நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Aahaa.... Pinnringaley ji @Music_Santhosh 👏👏 😍 #Chiyaan60 https://t.co/UllOeUQxsb
— karthik subbaraj (@karthiksubbaraj) March 29, 2021

நடிகர் விக்ரம், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜுடன் இணைந்து தனது 60வது படத்தை  நடிக்கிறார். இன்னும் இந்த திரைப்படத்திற்கு பெயர் சூட்டப்படவில்லை என்பதால் தற்காலிகமாக சியான்-60 என்று அழைக்கப்படுகிறது. இந்த படத்தில் பணியாற்றும் கிராமிய இசைக்கலைஞர்களோடு இணைந்து அவர்களின் இசைகேற்பக சிறப்பாக நடமாடி அசத்தியுள்ளார் சந்தோஷ் நாராயணன். ஏற்கனவே இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் அவருக்கு பதில் சந்தோஷ் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola