குடும்பஸ்தன்
அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எஸ்.வினோத்குமார் தயாரிப்பில், நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்திருக்கும் படம் குடும்பஸ்தன். சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், "ஜெய ஜெய ஜெய ஹே" புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். வைசாக் இசையமைத்துள்ளார்.
தன்மானத்திற்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் எதிர்கொள்ளும் சவால்களே இந்தப் படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது. மணிகண்டன் நடித்து முன்னதாக வெளியான லவ்வர் மற்றும் குட் நை ஆகிய இரு படங்கள் தொடர் வெற்றிபெற்றன. தற்போது குடும்பஸ்தன் படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். வரும் ஜனவரி 24 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது
பாட்டில் ராதா
பா ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள படம் பாட்டில் ராதா. குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி, பரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ். கருணா பிரசாத், மாலதி அசோக் நவின், சுஹாசினி சஞ்சீவ், சிரஞ்சீவி, ஓவியர் சௌ. செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், அனீஷா, மாதவி ராஜ், கலா குமார் (ஜெய பெருமாள்), அன்பரசி, சேகர் நாராயணா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஷால் ரோல்டன் இசையமைத்துள்ளார். குடிப்பழக்கத்தை மையமாக வைத்து காமெடி டிராவாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
டோமினிக் & த லேடீஸ் பர்ஸ்
மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூடி நடித்து கெளதம் மேனன் இயக்கியுள்ள படம் டோமினிக் & த லேடீஸ் பர்ஸ். மம்முட்டி , கோகுல் சுரேஷ் , சுஷ்மிதா பட் , விஜி வெங்கடேஷ் , வினீத் , விஜய் பாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் டிடக்டிவ் ஏஜன்ஸி வைத்திருக்கும் முன்னாள் காவல் அதிகாரியாக மம்மூட்டி நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் இயக்குநராக களமிறங்குகிறார். இதனால் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழி ரசிகர்களிடமும் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.