ஒவ்வொரு வருடமும் பல்வேறு பெரிய பட்ஜட் திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் சில படங்கள் முதலீடு செய்ததை காட்டிலும் பலமடங்கு வசூலை திருப்பி எடுக்கின்றன. அதே நேரத்தில் ஒரு சில படங்கள் பெரியளவிலான தோல்வியை சந்திக்கின்றன. 500 கோடி செலவில் எடுக்கப்பட்ட பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் போட்ட பணத்தைக் கூட திருப்பி எடுக்கவில்லை. கதை , திரைக்கதை சிறப்பாக அமைந்தால் மக்கள் நல்ல படங்களை அங்கீகாரத்தை கொடுக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு பெரிய பட்ஜட்டில் எடுக்கப் பட்டு வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்.


கல்கி 2898




ரிஸ்க் எடுப்பது பிரபாஸுக்கு ஒரு சுவாரஸ்யமா? என்று தெரியவில்லை. அவர் நடிக்கும் படங்களில் பட்ஜட் எல்லாம் சிகரத்தை தொடுகின்றன. நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். சுமார் 600 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக இந்தப் படம் உருவாகிறது. இந்த ஆண்டு மே மாத திரைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.


தங்கலான்




பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் வரு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது. பார்வதி திருவோது, மாளவிகா மோகனன் உள்ளிட்டவர்கள் நடித்து ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை சுமார் 500 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. தங்கலான் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது.


கங்குவா




சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரியா நடித்து வரும் படம் கங்குவா. பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தங்கலான் படத்தை தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது.


காந்தாரா




கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா படத்தின் முதல் பாகம் பான் இந்திய வெற்றி பெற்றது. சிறிய பொருட்செலவில் எடுக்கப் பட்ட இந்தப் படம் 400 கோடிகளுக்கு மேலாக  வசூல் செய்து சாதனைப் படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி இருக்கிறார் நடிகர் ரிஷப் ஷெட்டி. முதல் பாகத்தைக் காட்டிலும் மிகப்பெரிய பொருட்செலவில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.


இந்தியன் 2




சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தியன் 2 படம் இந்த ஆண்டும் வெளியாகும் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்தியன் 2 வின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே .சூரியா, பிரியா பவானி சங்கர், சித்தார்த், உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். பிரம்மாண்டத்திற்கு பெயர்போன சங்கர் இந்தப் படத்தை 500 கோடி செலவில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


விடாமுயற்சி




மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது , த்ரிஷா கதாநாயகியாக மற்றும் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்து வெளிநாடுகளில் எடுக்கப்படுவதால் இந்தப் படத்தின் பட்ஜட் எதிர்பார்த்ததைவிட பலமடங்கு பெரிதாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப் படுகிறது.