சித்தார்த் நடித்து  கடந்த ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சரத்குமார் , தேவயானி , மீதா ரகுநாத் ,சைத்ரா அச்சார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். சித்தா படத்தைத் தொடர்ந்து சித்தார்த்திற்கு பெரியளவில் வெற்றியை இப்படம் கொடுத்தது. சமீபத்தில் இப்படம் ஓடிடியில் வெளியானது. அண்மையில் 3BHK படத்தைப் பார்த்தது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்

Continues below advertisement



3BHK படம் பார்த்த சச்சின்


சமூக வலைதளத்தில்  ரசிகர் ஒருவர் நீங்கள் சமீபத்தில் பார்த்து ரசித்த படம் குறித்து கேட்டபோது, அண்மையில் 3BHK படம் பார்த்து ரசித்ததாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதனை அப்படத்தின் நடிகை சைத்ரா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து சச்சின் தனது படத்தை பார்த்தது குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். 




ஒரு எளிய மிடில் கிளாஸ் குடும்பம் சொந்தமாக ஒரு வீடு வாங்க எதிர்கொள்ளும் போராட்டங்களை மையமாக கொண்ட படம் 3BHK. எட்டுத் தொட்டாக்கள் , குருதி ஆட்டம் ஆகிய படங்களை இயக்கிய ஶ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார் . பெரும்பாலான ரசிகர்கள் தங்கள் குடும்பத்தோடு தொடர்பு கொள்ளும் வகையில் இருந்ததால் இப்படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸிடம் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தைத் தயாரித்த அருண் விஸ்வா இப்படத்தை தயாரித்துள்ளார். பின்னணி பாடகி பாம்பே ஜெயஶ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் .