மேலும் அறிய

இளையராஜா இசையில் நடிக்க ஆசைப்பட்ட எம்ஜிஆர் - அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் இளையராஜா இசையில் படம் நடிக்க ஆசைப்பட்டு அந்த படத்திற்கான பூஜைகளும் போடப்பட்டு பாடல் பதிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் அரசியலையும், சினிமாவையும் பின்னிப்பிணைத்தவர் எம்ஜிஆர். நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து பின்னாளில் உயிருடன் இருந்த வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்த பெருமை எம்ஜிஆருக்கு உண்டு. 

முதலமைச்சரான பின்பும் நடிக்க ஆசைப்பட்ட எம்ஜிஆர்:

அரசியலில் ஈடுபாடு கொண்டு ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும் எம்ஜிஆருக்கு நடிப்பின் மீது தீராத ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. அப்போது, அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க திட்டமிட்டு அதற்காக இசையமைக்க ஒப்பந்தமானவர் இளையராஜா.

இதுகுறித்து, மறைந்த கவிஞர் வாலி ஒரு முறை பேட்டியில் கூறியிருப்பதாவது, 

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது திடீரென ஒரு நாள் நான் படம் நடிக்கப்போகிறேன் என்று கூறிவிட்டார். அதன்பின்னர், அவரை நேரில் சென்று பார்த்தேன். நடிக்கலாம் என்று உள்ளேன். நீங்களே கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதுங்கள் என்றார். என்ன அண்ணே? முதலமைச்சராக இருந்து கொண்டு நடிக்க அனுமதிப்பார்களா? என்று கேட்டேன். அப்போது மொரார்ஜி தேசாய் அரசாங்கம். 

இளையராஜாவை பரிந்துரைத்த எம்ஜிஆர்:

அதெல்லாம் நான் ஏற்பாடு செய்கிறேன். உனக்கென்ன? பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் பதிவு செய்து பூஜையை போடு என்றார். நான் சொல்லாமலே அவரே இந்த அன்னக்கிளி எல்லாம் பண்றானே ஒரு பையன் அவன போடலாமா? என்று கேட்டார். போடலாமே என்று சொன்னேன். சரி இளையராஜாவை போடு என்றார்.

உடனே, மாலையில் மாலைமுரசில் இளையராஜா எம்ஜிஆர் படத்திற்கு இசையமைக்கிறார் என்ற செய்தி வந்தது. ஒரு பாடலையும் பிரசாத் ஸ்டூடியோவில் ரெக்கார்ட் செய்தோம். மலேசியா வாசுதேவன் பாடினார். கே. சங்கர் டைரக்ஷன். 

அனுமதி கொடுத்த பிரதமர்:

எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் எல்லாம் ஒரு முதலமைச்சர் எப்படி 
நடிக்கலாம்? என்று பெரிய விஷயம் ஆக்கிவிட்டார்கள். அந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டியவர் ஆளுநர் பட்வாரி, அவரை வரவிடாம தடுத்து நிறுத்திட்டாங்க. பூஜைக்கு வரவில்லை அவர். அதன்பின்னர், எம்ஜிஆர் மொரார்ஜி தேசாயை பார்த்துள்ளார். 

மறுநாள் எம்ஜிஆர் எனக்கு போன் பண்ணார். நீங்க இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பாருங்க என்றார். பிரதமர் மொரார்ஜி தேசாய் முதலமைச்சர் எம்ஜிஆர் நடிக்க அனுமதி என்று செய்தி இருந்தது. 

இவ்வாறு அவர் அந்த நேர்காணலில் கூறியிருப்பார். 

கைவிடப்பட்டது ஏன்?

அவ்வாறு எம்ஜிஆர் நடிப்பில் இளையராஜா இசையமைக்க ஒப்பந்தமான படம்தான் நான் உன்னை விடமாட்டேன். 1978ம் ஆண்டு அந்த படத்தின் பணிகள் தொடங்கியது. ஆனால், தொடர் அரசியல் அழுத்தம் காரணமாக எம்ஜிஆர் நடிப்பில் உருவாக இருந்த அந்த படம் கைவிடப்பட்டது. 

அவர் முதலமைச்சராக இருந்து கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தினால் மக்கள் பணி தடைபடும் என்ற தொடர் விமர்சனங்கள் எழுந்ததால் அந்த படம் கைவிடப்பட்டது. அந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தால் எம்ஜிஆருக்கும் இசையமைத்த பெருமையை அவர் பெற்றிருப்பார். 

எம்ஜிஆருக்காக இசையமைத்த பாடலைத்தான் உன்னால் முடியும் தம்பி படத்தில் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த படத்தில் இடம்பிடித்த என்ன சமையலோ பாடல்தான் அந்த பாடல் என்றும் தகவல்கள் உண்டு. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கொத்தாக சிக்கிய சிவனாண்டி கேங்.. கார்த்திக் ப்ளானை மோப்பம் பிடித்த முத்துவேல் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொத்தாக சிக்கிய சிவனாண்டி கேங்.. கார்த்திக் ப்ளானை மோப்பம் பிடித்த முத்துவேல் - கார்த்திகை தீபத்தில் இன்று
“ஜூலை மலர்களே” பாடல்.. அதோட அர்த்தம் தெரியுமா? - இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பகிர்ந்த தகவல்!
“ஜூலை மலர்களே” பாடல்.. அதோட அர்த்தம் தெரியுமா? - இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பகிர்ந்த தகவல்!
'இறுதிப்பக்கம்' இயக்குநரின் அடுத்த அதிரடி: புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர்,  பூஜையுடன் துவங்கியது!
'இறுதிப்பக்கம்' இயக்குநரின் அடுத்த அதிரடி: புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர்,  பூஜையுடன் துவங்கியது!
கேஸ் தட்டுப்பாடு.. வீட்டுக்கு ஒரு சிலிண்டர் தரலாமே?.. விஜயை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
கேஸ் தட்டுப்பாடு.. வீட்டுக்கு ஒரு சிலிண்டர் தரலாமே?.. விஜயை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget