பார்ச்ட், சேக்ரட் கேம்ஸ், பேய், ஃபோபியா மற்றும் பல படங்களில் தனது பல்துறை மற்றும் நடிப்புத் திறமையால் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களைக் கவர்ந்தவர் நடிகர் ராதிகா ஆப்தே. தமிழில் நடிகர் ரஜினிகாந்த் உடன் கபாலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ராந்த் மாஸேயுடன் ஃபாரன்சிக் என்கிற சீரிஸில் நடித்து வருகிறார். அதன் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியீட்டு நிகழ்வில் பேசிய ஆப்தே தான் ஒல்லியாக இருப்பதால் எதிர்கொண்ட பாடி ஷேமிங் பிரச்னைகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
குறிப்பாக,’தனது உடலில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தப்பட்டதாகவும் போடாக்ஸ் உள்ளிட்ட ஊசிகளைப் போட்டுக்கொள்ள சொல்லப்பட்டதாகவும் அது தன்னைக் கோபப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். 






"எனக்கு சினிமாவில் முன்பு நிறைய அழுத்தம் இருந்தது. நான் புதியவளாக இருந்தபோது, ​​என் உடலிலும் முகத்திலும் நிறைய அறுவை சிகிச்சைகளைச் செய்யச் சொன்னார்கள். நான் சந்தித்த முதல் நபர், என் மூக்கை மாற்றச் சொன்னார்கள். நான் சந்தித்த இரண்டாவது நபர் என்னை மார்பகத்தை பெரிதுபடுத்தினால் வேலை கிடைக்கும் என்றார். பின்னர் அது தொடர்ந்தது, பின்னர் என் கால்களுக்கும் ஏதாவது சிகிச்சை செய்யச் சொன்னார்கள்.


பின்னர் என் தாடையில் ஏதாவது சிகிச்சை செய்ய வேண்டும், மேலும் கன்னங்கள் தட்டையாக இருப்பதால் அங்கே ஏதாவது நிரப்ப வேண்டும் என்றார்கள். பின்னர் போடோக்ஸ் ஊசி போடச் சொன்னார்கள்.நான் போட மாட்டேன் என மறுத்தேன். அது எனக்கு திரையுலகில் வளரத் தடையாக இருந்தது.ஆனால் நான் அதை அழுத்தமாக உணர்ந்ததில்லை. உண்மையில், நான் கோபமாக உணர்ந்தேன், உண்மையில் இவை அனைத்தும் என் உடலை இன்னும் அதிகமாக நேசிக்க உதவியது, ஏனென்றால் ‘நான் என் உடலை நேசிக்கிறேன்’” என்றார்.