தமிழ் சினிமாவில் குறைவான பட்ஜெட் படங்களில் நடித்து தன்னால் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே ரூ.100 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்த படம் தான் லவ் டுடே. இந்தப் படத்திற்கு பிறகு இப்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் டிராகன். 


கல்லூரி வாழ்க்கை, காதல், ஆபிஸ், காதல் தோல்வி என்று இளைஞர்களை கவரும் அம்சங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'டிராகன்' படத்தை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக இந்த படத்தில், என்ன தான் பில்டிங் ஸ்ட்ராங்காக இருந்தாலும் அதற்கான பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்காக இருந்தால் தான் ஒரு விஷயம் சிறப்பாக இருக்கும் என, அனைவருக்கு புரியும்படி ஒரு மெசேஜ் கொடுத்துள்ளார் இயக்குனர். பல இடங்களில் ஹீரோ தோற்றாலும், இந்த படத்தில் உள்ள உண்மையான இந்த கருத்து தான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.



Dragan Vs Vidaamuyarchi: அஜித்தின் விடாமுயற்சி சாதனையை அடித்து பறக்கவிட்ட பிரதீப் ரங்கநாதனின் டிராகன்!


இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக, அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதே போல் கெளதம் மேனன், மிஸ்கின், கே.எஸ்.ரவிக்குமார், அஸ்வந்த் மாரிமுத்து உள்ளிட்ட 4 இயக்குனர்கள் இந்த படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். கடந்த 21 ஆம் தேதி திரைக்கு வந்த, டிராகன் படத்தை ரூ.35 கோடியில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 


இளம் ரசிகர்கள கவர்ந்த டிராகன் முதல் நாள் முதலே பாக்ஸ் ஆபிஸில் வசூல் குவிக்க தொடங்கிவிட்டது. டிராகன் வெளியாகி 4  நாட்கள் கடந்த நிலையில் ரூ.60 கோடி வசூல் குவித்து சாதனை படைத்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் டிராகன் ரூ.4 கோடி வசூல் குவித்திருக்கிறது. இப்படி அடுத்தடுத்து 2 படங்களில் நடித்து ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் மீது தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு அளவுகடந்த நம்பிக்கை ஏற்பட்ட நிலையில் 3ஆவது படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க சம்பதம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அவரது படத்திற்கு எத்தனை கோடி வேண்டுமானால் தரலாம் என்று அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.


இந்த நிலையில் தான் டிராகன் விடாமுயற்சியின் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.  முதல் திங்கள்கிழமை காட்சியில் இந்த ஆண்டில் இதுவரை அதிகம் வசூல் செய்த படமாக, விடாமுயற்சி (2.75) கோடி வசூலுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அந்த வசூலை, டிராகன் முறியடித்துள்ளது. இந்த படம் முதல் திங்கள் அன்று  ரூ.3.81 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.