‘திரெளபதி’ ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜியின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் இயக்குநர் மோகன் ஜி “முத்துமலை முருகன் அருளுடன் இன்று பூஜை இனிதே நடைபெற்றது. அடுத்த திரைப்படத்தின் தலைப்பு பகாசூரன். திங்கள் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நட்டியும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இயக்குநர் மோகன் ஜி வண்ணாரப் பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட 3 படங்களை இயக்கியுள்ளார். இதில் திரௌபதி திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தபடத்தில் ஷாலினியின் அண்ணனும் , நடிகர் அஜித்தின் மைத்துனனுமான ரிச்சர்ட் நடித்திருந்தார்.
இந்தபடத்தை குறிப்பிட்ட சமுக்கத்தினர் எதிர்த்தனர், குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதரித்தனர். ஊடகங்களிலும் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது . எது எப்படியோ இந்த படத்தை தயாரித்து கொடுத்த ஜி.எம். ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அதிர்ஷடம்தான். குறைந்த பட்ஜெட் முதலீட்டில் எடுக்கப்பட்ட திரௌபதி படம் நல்ல லாபம் பெற்றுத்தந்தது. அதனைத்தொடர்ந்து வந்த ருத்ரதாண்டவம் படமும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்