பிரபல தெலுங்கு சினிமாவின் இயக்குநர் ராகவேந்திர ராவ் சினிமா படப்பூஜை ஒன்றில் நடிகைகளிடம் அத்துமீறி நடந்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் குவிந்து வருகிறது. 

Continues below advertisement

ஹைதராபாத்தில் இயக்குநர் அனில் ரவிபுடியின் அடுத்தப்பட பூஜை நடைபெற்றது.வெங்கடேஷ் டக்குபாட்டி, நந்தமுரி கல்யாண்ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் தொடக்க நிகழ்ச்சி கடந்த ஜூன் 18ம் தேதி நடைபெற்றது. அப்போது தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். 86 வயதான அவர் இப்படத்தின் முதல் காட்சியை இயக்கி ஷூட்டிங்கை தொடங்கி வைத்தார். 

Continues below advertisement

ஆனால் இந்த நிகழ்ச்சியில் ராகவேந்திரா ராவின் நடத்தை மிகப்பெரும் அளவில் சர்ச்சையை கிளப்பியது. இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு, சுரேஷ் பாபு மற்றும் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். இதில் ராகவேந்திரா ராவின் நடத்தை மிகப்பெரும் அளவில் சர்ச்சையை கிளப்பியது. அவர் முதல் காட்சியை இயக்க நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டியை அழைத்தார். இருவரையும் ஓரிடத்தில் நிறுத்தி அவர்கள் மீது  வெங்கடேஷ் மற்றும் கல்யாண்ராம் எப்படி வைக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தார். 

ஆனால் ராகவேந்திர ராவின் செயல்கள் உள்நோக்கத்துடன் இருப்பதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இணையவாசிகள் பலரும் ராகவேந்திர ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அதில் ஒருவர், “இந்த வயதான நபருக்கு இதெல்லாம் தேவையா?.. பெண்கள் அனுமதியின்றி அவர்களை தொட்டு பேச உரிமை யார் கொடுத்தது என்ற கேள்வி எழுப்பினார். இந்த காட்சிகளை அவர் தொடாமலேயே செய்து காட்டியிருக்க முடியும். பார்க்கவே அருவருப்பாக உள்ளது” என தெரிவித்தார். 

Also Read: Samantha Ruth Prabhu: சண்டை காட்சியில் நிஜமாகவே அடிவாங்கிய சமந்தா.. ஷுட்டிங்கில் நடந்த ஷாக் சம்பவம்!

மற்றொருவர், “ராகவேந்திர ராவ் அவர்களே, இது என்ன மாதிரியான நடத்தை? இதுபோன்ற காட்சிகள் வைரலாவது இது முதல் முறையல்ல. நிஹாரிகாவிடம் நீங்கள் அநாகரிகமாக நடந்துக் கொண்ட பிறகு அதில் இருந்து பாடம் கற்று கொள்வீர்கள் என நினைத்தோம். ஆனால் மீண்டும் அதே மோசமான செயலை நிகழ்த்தி காட்டியிருக்கிறீர்கள்” என கண்டித்துள்ளார்.  

முன்னதாக இருவுரி பமலா கௌகிலிலோ என்ற படத்தின் நிகழ்ச்சியில் இயக்குநர் ராகவேந்திர ராவ் பிரபல நடிகை நிஹாரிகா கொனிடேலாவின் இடுப்பில் கைவைத்த சம்பவம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியிருந்தது. அந்த சூழலில் தர்ம சங்கடமாக உணர்ந்ததை முகத்தில் காட்டிய நிஹாரிகா பின்னர் சுதாரித்து தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.