2024 ஆம் ஆண்டுக்கான ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் வெற்றி பெற்ற திரைப்படம், பிரபலங்கள் பற்றி காணலாம்.
ஃபிலிம்பேர் விருதுகள் இந்தியாவின் மிகப்பெரிய விருது வழங்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும். 1954 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது வழங்கும் விழா நடப்பாண்டு 69வது ஆண்டை எட்டியுள்ளது. தேசிய விருதுக்கு அடுத்தாக பிரபலங்கள் ஃபிலிம்பேர் விருதை தான் பெரிதாக கருதுகிறார்கள். அந்த வகையில் 69வது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா குஜராத் மாநிலம் காந்தி நகரில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வை கரண் ஜோஹர் , ஆயுஷ்மான் குரானா மற்றும் மணீஷ் பால் ஆகியோர் தொகுத்து வழங்கினர் .ரன்பீர் கபூர், கார்த்திக் ஆர்யன், கரீனா கபூர் கான், வருண் தவான், ஜான்வி கபூர் மற்றும் சாரா அலி கான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விருது பெற்ற படம் மற்றும் பிரபலங்கள்
- சிறந்த படம் - 12th Fail
- சிறந்த இயக்குனர் - விது வினோத் சோப்ரா (12th Fail )
- சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள் தேர்வு) - ஜோரம் (Joram)
- சிறந்த நடிகர் (ஆண்) - ரன்பீர் கபூர் (அனிமல்)
- சிறந்த நடிகர் (பெண்) - ஆலியா பட் (ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி)
- சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) - விக்ராந்த் மாஸ்ஸி (12வது தோல்வி)
- சிறந்த நடிகை (விமர்சகர்கள் தேர்வு) - ராணி முகர்ஜி (திருமதி சாட்டர்ஜி Vs. நார்வே) மற்றும் ஷெபாலி ஷா (த்ரீ ஆஃப் அஸ்)
- சிறந்த பாடல் வரிகள் - அமிதாப் பட்டாச்சார்யா (தேரே வாஸ்தே - ஜரா ஹட்கே ஜரா பச்கே)
- சிறந்த இசை - அனிமல் (பிரீதம், விஷால் மிஸ்ரா, மனன் பரத்வாஜ், ஷ்ரேயாஸ் புராணிக், ஜானி, பூபிந்தர் பாபால், அஷிம் கெம்சன், ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர், குரிந்தர் சீகல்)
- சிறந்த பின்னணி பாடகர் - பூபிந்தர் பப்பல் (அர்ஜன் வைலி - அனிமல்)
- சிறந்த பின்னணி பாடகி - ஷில்பா ராவ் (பேஷாரம் ரங் - பதான்)
- சிறந்த கதை - அமித் ராய் (OMG 2) மற்றும் தேவாஷிஷ் மகிஜா (ஜோரம்)
- சிறந்த திரைக்கதை - விது வினோத் சோப்ரா (12th Fail )
- வாழ்நாள் சாதனையாளர் விருது - டேவிட் தவான்
- சிறந்த அறிமுக நடிகர் - ஆதித்யா ராவல் (பராஸ்)
- சிறந்த அறிமுக நடிகை - அலிசே அக்னிஹோத்ரி (ஃபாரே)
- சிறந்த நடனம் - கணேஷ் ஆச்சார்யா (வாட் ஜும்கா?- ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி)
- சிறந்த எடிட்டிங் - ஜஸ்குன்வர் சிங் கோஹ்லி - விது வினோத் சோப்ரா (12th Fail)
- சிறந்த வசனம் - இஷிதா மொய்த்ரா (ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி)
- சிறந்த பின்னணி இசை - ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் (அனிமல்)
- சிறந்த ஒளிப்பதிவு - அவினாஷ் அருண் தாவரே (த்ரீ ஆஃப் அஸ்)
- சிறந்த ஆடை வடிவமைப்பு - சுப்ரதா சக்கரவர்த்தி அமித் ரே (சாம் பகதூர்)
- சிறந்த VFX - ரெட் சில்லிஸ் (ஜவான்)
- சிறந்த சண்டை பயிற்சியாளர் - ஸ்பிரோ ரசாடோஸ், அன்ல் அரசு, கிரேக் மேக்ரே, யானிக் பென், கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் (ஜவான்)
இந்நிலையில் அனிமல் படத்துக்காக சிறந்த நடிகர் விருது பெற்ற ரன்பீர் கபூரை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள். ஏற்கனவே அந்த படம் மோசமான விமர்சனங்களை ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பிரபலங்களிடம் இருந்தும் பெற்ற நிலையில் ஆணாதிக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் கேரக்டரில் நடித்த ரன்பீர் கபூர் எப்படி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பல கேள்விகளை ரசிகர்கள் முன்வைத்துள்ளனர்.