திரையரங்கில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படம் கடந்த மே 6 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் தற்போது பெண்ணியவாதிகளிடம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. படத்தின் பெண் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கும் விதம் பற்றி பலர் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அடுத்தடுத்து மூன்று ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை கொடுத்து வந்த பிரதீப் ரங்கநாதன் ஒரு சிறிய சறுக்கலை சந்தித்துள்ளார். சிவன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியான எல்.ஐ.கே திரைப்படம் ரசிகர்களிடம் ஏமாற்றத்தையே உண்டாக்கியது. இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் ரவுடி பிக்ச்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்தது. ஆனால் எல்.ஐ.கே திரைப்படம் மொத்தமாக ரூ66 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. அண்மையில் இப்படம் ஓடிடியில் வெளியான பின் புதிய விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஒருபக்கம் படத்தின் சுமாரான திரைக்கதையை விமர்சித்து சிலர் பதிவிடு வருகிறார்கள். மறுப்பக்கம் படத்தில் க்ரித்தி ஷெட்டி மற்றும் கெளரி கிஷன் ஆகிய இருவரையும் கவர்ச்சி ரீதியாக மட்டுமே நடிக்க வைத்துள்ளதாக விக்னேஷ் சிவன் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
