Simbu : சிம்பு படத்தில் பணியாற்ற மறுத்த திரைப்பட தொழிலாளர் சங்கம் ? மறுபடியும் பிரச்சனையா!
வேல்ஸ் ஃபிமிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் முன்பணம் வாங்கிவிட்டு திருப்பி தராததால் நடிகர் சிம்பு படத்தில் பணியாற்ற ஃபெஃப்சி ஊழியர்கள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்

நடிகர் சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தில் நடித்து வருகிறார். சிம்பு மற்றும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் உரிமையாளர் தயாரிப்பாளர் ஐசர் கணேஷ் இடையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை நடந்து வருவதால் அரசன் படத்தில் பணியாற்ற தென் இந்திய திரைப்பட தொழிலாளர் சங்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் சிம்பு நடிகர் சங்கத்தை அனுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சிம்பு கடந்த 2022 ஆம் ஆண்டு வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரித்த 'வெந்து தனிந்தது காடு' படத்தில் நடித்தார். இந்த படத்திற்குப் பிறகு, ஐசரி கணேஷ் தயாரிக்கும் மற்றொரு படத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டு, சம்பளமாக ரூ5 கோடி முன்பணம் பெற்றிருந்தார். இருப்பினும், பல்வேறு காரணங்களால் அந்தத் படம் நடைபெறவில்லை. இதில் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் சிம்புவின் மீதே சுமத்தப்பட்டன. சிம்புவுக்கு கொடுத்த 5 கோடி தவிர தயாரிப்பாளர் ஐஷரி கணேஷ் படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகளுக்காக சுமார் ரூ7 கோடி செலவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, சிம்பு மொத்தம் ₹12 கோடி (₹5 கோடி முன்பணம் + ₹7 கோடி செலவுகள்) தரவேண்டியுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், சிம்பு ஆரம்பத்தில் தனக்கு ₹5 கோடி மட்டுமே கிடைத்ததாகவும், அந்தத் தொகையை மட்டுமே திருப்பித் தருவதாகவும் கூறினார். பின்னர், அவர் ₹3 கோடியைத் திருப்பிச் செலுத்த முன்வந்ததாகவும் எதிர் தரப்பிலிருந்து செய்திகள் வருகின்றன. இந்த சர்ச்சைக்கு மத்தியில், FEFSI தலையிட்டு, பிரச்சினை தீர்க்கப்படும் வரை தற்போது சிம்பு நடித்து வரும் அரசன் படத்திற்கு ஒத்துழைப்பு தர மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, அரசன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிம்பு இரண்டு நாள் விளம்பரப் படப்பிடிப்பில் (காசா கிராண்ட்) பங்கேற்கவிருந்தார், ஆனால் FEFSI-யின் ஒத்துழைப்பின்மையால் அந்தப் படப்பிடிப்பும் தடைபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட சிம்பு, நடிகர் சங்கத்தை நேரடியாக அணுகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, சிம்பு மற்றும் ஐஷரி கணேஷ் இடையே நிலவும் ஈகோ மோதல் காரணமாக, அரசன் படப்பிடிப்பு சிக்கலில் உள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இரு தரப்பினரும் சட்டரீதியான வழிகளைக் கையாளக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும் உள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















