Tamannaah: அத்துமீறிய ரசிகர்கள்.. ஆத்திரத்தில் கத்திய தமன்னா.. கடை திறப்பு நிகழ்ச்சியில் பரபரப்பு..!

கேரளாவில் தன்னிடம் அத்துமீற முயன்ற ரசிகர்களிடம் தமன்னா கோபப்பட்டு கத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

இந்திய திரையுலகின் மிகப்பிரபலமான நடிகையாக உலா வருபவர் தமன்னா. 2005-ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமான தமன்னா ”கேடி” என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கில் நடித்து முன்னணி நடிகையாக உலா வரும் தமன்னா தற்போது இந்தியிலும் பிசியாக உள்ளார்.

Continues below advertisement

கேரளாவில் தமன்னா:

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது லூலூ வணிக வளாகம். இந்த வளாகத்தில் புதிய கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை தமன்னா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் வருகையை அறிந்த ரசிகர்கள் வணிக வளாகத்தில் குவிந்தனர்.

ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. தமன்னா வந்த பிறகு ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர். பலரும் அவருடன் செல்ஃபி எடுக்கவும், தமன்னாவை புகைப்படம் எடுக்கவும் முண்டியடித்தனர்.

தமன்னாவும் ரசிகர்கள் சிலருடன் செல்ஃபியும், புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதனால், ரசிகர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, தமன்னா ரசிகர்கள் கூட்டத்தின் நடுவே சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

அத்துமீறிய ரசிகர்கள்:

அப்போது, ரசிகர்களில் சிலர் தமன்னாவிடம் அத்துமீறி நடக்க முயற்சித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த தமன்னா கூட்டத்திலே கத்தியுள்ளார். இதையடுத்து, தமன்னாவின் பாதுகாப்பிற்காக வந்த பவுன்சர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். தமன்னா தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்ற ரசிகர்களிடம் கோபமாக கத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கிய வணிக வளாகங்கள் திறப்பு, கடை திறப்பு நிகழ்வுகளுக்கு தற்போது திரைபிரபலங்கள் பங்கேற்பது வழக்கமாக வருகிறது. அந்த வகையில், இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு பெண் பிரபலங்கள் செல்லும்போது அவர்களிடம் சிலர் ரசிகர்கள் என்ற போர்வையில் அத்துமீறுவது நடைபெற்று வருகிறது. இந்த போக்கு கண்டிக்கத்தக்கது என்று பலரும் எச்சரித்து வருகின்றனர். மேலும், பொது இடங்களில் இதுபோன்று அநாகரீகமாக நடப்பவர்களுக்கு தக்க தண்டனையும் வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். 


தமன்னா நடிப்பில் இந்தியில் லஸ்ட் ஸ்டோரீஸ் வெளியாக உள்ள நிலையில், தன்னுடைய 18 ஆண்டுகால திரை வாழ்வில் முதன்முறையாக மலையாளத்திங் அறிமுகமாகிறார். பந்த்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் நாயகன் திலீப் நடிக்கிறார். அவருடன் டைனோ மொரியா, சரத்குமார், ரோமஞ்சம் புகழ் அர்ஜூன், கத்தி பட வில்லில் நெய்ல் நிதின் முகேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். தமன்னா விஜய் வர்மா என்பவருடன் காதலில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

தமிழில் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தமன்னா தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: Dahaad Web Series: 29 பெண்கள் கொலை.. கண்ணெதிரே குற்றவாளி....திணறும் காவல்துறை.. அமேசான் பிரைமை கலக்கும் தஹாத்

மேலும் படிக்க: 26 Years Of Suryavamsam: குடும்பங்கள் கொண்டாடிய சூரியவம்சம்.. ரிலீசாகி 26 வருடங்கள் ஆகிறது.. சுவாரஸ்ய தகவல்கள் இதோ..

                                                                                                                     

Continues below advertisement
Sponsored Links by Taboola