தக் லைஃப் ஓடிடி ரிலீஸ்
மணிரத்னம் இயக்கி கமல் சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த தக் லைஃப் திரைப்படம் இன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 5 ஆம் தேதி திரையரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியானது தக் லைஃப். நாயகன் படத்திற்கு பின் 38 ஆண்டுகளுக்குப் பின் கமல் மணிரத்னம் கூட்டணியில் வெளியான இந்த படம் முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்கியது. திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பின்னர் ஓடிடியில் படம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் படத்திற்கு திரையரங்கில் சுமாரான வரவேற்பு கிடைக்கவே 4 வாரங்களில் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
தக் லைஃப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் ரூ 130 கோடிக்கு வாங்கியது. ஆனால் திரையரங்கில் படம் தோல்வியை தழுவியதால் ரூ 110 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே ஓடிடியில் ரிலீஸ் ஆனதால் வட மாநில திரையரங்குகள் தக் லைஃப் தயாரிப்பாளர்களிடம் ரூ 25 லட்சம் அபராதம் விதித்துள்ளார்கள்.
தக் லைஃப் ஓடிடி ரிலீஸ் ப்ரோமோ
தக் லைஃப் ஓடிடி ரிலீஸை அறிவிக்கும் விதமாக புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் சிம்பு மற்றும் கமல் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்கிறார்கள். அதில் கமலை புறக்கணித்து அனைத்து கேள்விகளும் சிம்புவிடமே கேட்கப்படுகின்றன. படத்தை விட இந்த ப்ரோமோ நன்றாக இருப்பதாக ரசிகர்கள் சமுக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்
தக் லைஃப் படக்குழு
கமல் சிம்பு தவிர்த்து தக் லைஃப் படத்தில் த்ரிஷா , அபிராமி , ஐஸ்வர்யா லக்ஷ்மி , நாசர் , வையாபுரி , அசோக் செல்வன் , சஞ்சனா , வடிவுக்கரசி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது