கூலி படத்தின் வசூல் குறித்து சந்தேகங்கள் எழுந்ததால் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே சமூக வலைதளத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கூலி படத்தின் வசூல் போலியானது என ரஜினி ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Continues below advertisement



லியோ 600 கோடி வசூல் போலியான தகவலா?


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 148 கோடி வசூலித்ததாக படக்குழு தகவல் வெளியிட்டது.  லியோவை விட 4000 திரையரங்குகளுக்கும் மேல் திரையிடப்பட்ட ஷாருக் கானின் பதான் திரைப்படம் முதல் நாளில் 104 கோடி மட்டுமே வசூலித்திருந்த நிலையில் குறைவான திரையரங்குகளில் வெளியான லியோ முதல் நாளில் 148 கோடி வசூலித்திருக்க வாய்ப்பில்லை என ஒரு தரப்பினர் கூறினர். ஒட்டுமொத்தமாக லியோ திரைப்படம் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூலி படத்தின் வசூல் தகவல்கள் பொய்யானவை என விஜய் ரசிகர்கள் குற்றமசாட்டிய நிலையில் தற்போது லியோ படத்தின் வசூல் தகவல்கள் போலியானவை என ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 


தயாரிப்பாலர் லலித் குமார் வருமான வரி சான்றிதழ்


இப்படியான நிலையில் லியோ படம் திரையரங்குகளில் ரூ 160 கோடி மட்டுமே வசூலித்ததாக வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார். லியோ படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ 124 கோடிக்கும் , ஆடியோ உரிமையை ரூ 24 கோடிக்கும் , தென் இந்திய சேட்டலை உரிமம் ரூ 72 கோடிக்கும் , இந்தி உரிமையை ரூ 24 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக லியோ திரைப்படத்தின் மூலம் தனக்கு ரூ 404 கோடியே 56 லட்சம் வருமான வரித்துறையில் தாக்கல் செய்துள்ளார். இதனை அடிப்படையாக வைத்து லியோ படம் 600 கோடி வசூலித்ததாக கூறப்படும் தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான தகவல் என ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 


லியோ நிஜ வசூல் எவ்வளவு ?


இதுகுறித்து பட தயாரிப்பாளர் தனஞ்சயன் பேசியபோது தயாரிப்பாளர் லலித் குமார் வருமான வரித் துறைக்கு தாக்கல் செய்த தகவலில் தன்னுடைய தனிப்பட்ட வருமானத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். படத்தின் மொத்த வசூல் 600 கோடியில்  தன்னுடைய ஷேர் 160 கோடி என்று தான் அவர் குறிப்பிட முடியும் மொத்த  வசூலையும் குறிப்பிட முடியாது. இதனை அடிப்படையாக வைத்து லியோ படத்தின் வசூலை போலியானது என்று சொல்வதில் அர்த்தம் இல்லை என தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.