இலங்கையைச் சேர்ந்தவர் யோஹானி டி சில்வா. இவர் யோஹானி என்ற பெயரில் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்று வைத்துள்ளார். அதில் அவர் தொடர்ந்து பல பாடல்களை பாடி பதிவிட்டு வந்துள்ளார். அவரது பாடல்களுக்கு யூ டியூப்பில் கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக இலங்கை மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.


இந்த நிலையில், இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கலாச்சாரத்தின் புதிய தூதுவராக யோஹானி டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கலாச்சார தூதுவராக நியமிக்கப்பட்ட யோஹானிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.








இலங்கை அரசு இதுதொடர்பாக தங்களது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி சேவைகளில் புதிய கலாச்சாரத் தூதுவராக யோஹானி டி சில்வா தோன்றுவதில் பெருமிதம் கொள்வதாக தமிழிலும், சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த மே மாதம் இவர் தனது யூ டியூப் தொலைக்காட்சியில் மணிகே மகே ஹிதே என்ற பாடல் ஒன்றை பாடி வெளியிட்டிருந்தார். அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை அடைந்தது. இந்த பாடல் மூலம் யோஹானியின் வசீகர குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உருவாகினர்.


கடந்த மே மாதம் வெளியான இந்த பாடலை இதுவரை 117 மில்லியன் பார்வையாளர்கள் யூ டியூப்பில் பார்த்துள்ளனர். அதாவது 11 கோடி பார்வையாளர்களை இந்த பாடல் தற்போது கடந்துள்ளது. யோஹானி பாடிய இந்த பாடல் பல்வேறு மொழிகளிலும் பலராலும் பாடப்பட்டுள்ளது. இந்த பாடலை யோஹானி தமிழிலும், மலையாளத்திலும் பாடியுள்ளார்.




இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் அவருடைய சமூக வலைதளங்களில் இந்த பாடலை பகிர்ந்து, யோஹானியை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாராட்டியிருந்தார். இந்த பாடல் காரணமாக யோஹானியின் யூ டியூப் தொலைக்காட்சியின் சப்ஸ்கிரைபர்கள் எனப்படும் சந்தாதாரர்கள் 2.38 மில்லியனை கடந்துள்ளது. 


இந்நிலையில், இந்தியா வரவிருக்கும் யோஹானி, குருகிராம் மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளில் பாட உள்ளார். செப்டம்பர் 30-ம் தேதி குருகிராமிலும், அக்டோபர் 3-ம் தேதி ஹைதராபாத்திலும் பாட உள்ளார். இதனால், இந்த நிகழ்ச்சியை இந்திய ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.


பேர் வெச்சாலும் வைக்காமல் போனாலும் மல்லி வாசம்...பாடகர் கதை.... கீழே!


Flashback: ‛பேர் வெச்சாலும் வைக்காமல் போனாலும்’ வாசுதேவன்... மலேசியா வாசு தேவனான கதை!