கர்ணன் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜின் பெயரிடப்படாத திரைப்படம் 2022ல் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாப்பாத்திரமாக நடிக்க உள்ளதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கிடையே தற்போது இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஃபாஹத் ஃபாசிலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. 


ஃபாஹத் பாசில் முன்னதாகத் தெலுங்கில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து புஷ்பா திரைப்படத்திலும் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.









தெலுங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா திரைப்படம் இந்த வருடத்தின் இறுதியில் கிறிஸ்துமஸுக்கு ரிலீசாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஃபகத் ஃபாசிலின் லுக் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள பதிவில், புஷ்பா படத்தின் வில்லன் கதாப்பாத்திரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்வார் சிங் செக்காவத் ஐபிஎஸ் என்ற பெயர் பலகைக்கு பின் ஃபகத் ஃபாசில் நிற்பது போன்ற போஸ்டர் இன்று வெளியானது. கேரளா மட்டுமல்லாது தென் இந்தியாவில் ஃபகத்துக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால், இந்த படத்தில் ரிலீஸுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கின்றனர். இந்நிலையில், #VillainOfPushpa ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இடம் பெற்றது.

முன்னதாக, இந்திய அளவில் எடுக்கப்பட்டுள்ள புஷ்பாவின் முதல் பார்வையான 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை (முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து) தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர்,  இரண்டு பாகங்களாக புஷ்பா வெளிவரும் என்று அறிவித்தனர்.  இதனையடுத்து புஷ்பா மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.