மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் , ஒட்டுமொத்த இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகிவுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தி வந்திய தேவனாக நடித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி மட்டுமல்ல பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஆனால் கார்த்தி தனது கெரியரை மணிரத்னத்தின் உதவி இயக்குநராக இருந்து தொடங்கியவர் என்பதும் பலருக்கு தெரியும் . தான் உதவி இயக்குநராக இருந்த சமயத்தில் மணிரத்னத்திற்கு அதிகம் பயப்படுவாராம் கார்த்தி. அதை அவரே பதிவு செய்திருக்கிறார்.
எனக்கு இப்போது கொஞ்சம் மணிரத்னம் சார் மீது பயம் குறைந்திருக்கிறது.ஆனால் இன்னும் பயம் இருக்கு. இந்தப் படத்தின் மூலம், நான் ஏ.டி.யாக இருந்தபோது இருந்ததைப் போலல்லாமல், மணி சார் உண்மையில் நிறைய விஷயங்களைத் ஓபன் செய்திருக்கிறார். 2017 இல்அவர் வேலையில் மட்டுமே ஒன்றிப்போயிருந்தார். ஆனால் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எங்களுடன் அரட்டை அடித்தார், நகைச்சுவையாகப் பேசினார், சில சமயங்களில் நாங்கள் படகில் இருக்கும்போது, அவர் எங்களை பார்த்து புன்னகை செய்வார் . அதெல்லாம் ரொம்ப அரிதானது. செட்டில் ஒவ்வொன்றையும் அதிகம் ரசித்தார். எங்களை அதிகமாக கலாய்த்தார். ரொம்ப ஜாலியாக இருந்தார்.
பொதுவாக ஒரு நடிகர் மற்றும் இயக்குநர் கூட்டணியில் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றியடைந்தால், அவர்களுக்கே தங்களது அடுத்த படத்தை நடிகர்கள் கொடுப்பது வழக்கம். ஆனால் தான் அப்படியாக நடிக்காததற்கு காரணம் என்ன என்பது குறித்து கார்த்தி மனம் திறந்திருக்கிறார். “ அது நடக்கவில்லை. ஏனென்றால் நான் வருடத்திற்கு இரண்டு படங்கள் அல்லது ஒரு படம் செய்கிறேன். எனவே, ஒரு இயக்குனர் மீண்டும் என்னுடன் பணியாற்ற வேண்டும் என்றால், அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். முத்தையா எனக்காகக் காத்திருந்தார், அதனால்தான் அது ( விருமன்) நடந்தது. இல்லையெனில், ஒரே நேரத்தில் தேதிகளைப் பெறுவது மிகவும் கடினம். அதனால்தான் நான் அதை தவறவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் பார்க்கலாம். லோகேஷுடன் விரைவில் வேலை செய்ய உள்ளேன். மீண்டும் எனது இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்,” என்றார்