தற்போது சமூக வலைத்தளங்களில் கிலி பால் மற்றும் அவரது சகோதரி நீமாவை  கண்டு ரசிக்காத இந்தியர்களே இல்லை என கூறலாம் . டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியில் கலக்கி வரும் இவர்கள் இருவரும் தான்சான்யாவை சேர்ந்தவர்கள் . இசைக்கு மொழி தேவையில்ல என்பதற்கிணங்க  இவர்கள் இருவரும் இந்தி தெரிந்தவர்கள் போல பாடல்களுக்கு வாயசைப்பது மற்றும் முக பாவனைகள் செய்வது என பலரின் கவனத்தை ஈர்த்துள்ளனர். தான்சான்யா பகுதியில் வசிக்கும் மக்களின் பாரம்பரிய உடையில்தான் இருவரும் ரீல்ஸ் செய்வார்கள். குறிப்பாக இந்தியில் வெளியான “ராதன் லம்பியான் “ என்னும் பாடல் இவர்கள் மீதான கவனத்தை ஊடகங்கள் பக்கமும் திருப்பியது.பல பாலிவுட் பிரபலங்களும் இவர்களின் வீடியோவை ஷேர் செய்திருந்தனர்.






ஒவ்வொரு வீடியோவும் செய்யும் பொழுது அதன் ஒரிஜினல் வீடியோவை பலமுறை பார்த்து பயிற்சி எடுப்பார்களாம் இந்த ப்ரோ- சிஸ்டர் ஜோடி . குறிப்பாக கிலி பால் இந்தி வார்த்தைக்கான அர்த்தத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதன் அர்த்தத்தை புரிந்துதான் நடிப்பாராம். ஆரம்பத்தில் டிக் டாக் செயலியில் நடித்து வந்த இவர்களுக்கு அங்கு வரவேற்பு அதிகமாகவே , சில இந்தியர்கள் , டிக்டாக் இந்தியாவில் பேன் செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் இன்ஸ்டாகிராமில் கூடுதல் வீடியோவை பதிவு செய்யுங்கள் என கூறியுள்ளனர். அதன் பிறகு இருவரும் இன்ஸ்டாகிராமில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். அதன் பிறகு தங்களுக்கு கிடைத்த வரவேற்பை கண்டு நான் ஆச்சர்யப்பட்டேன் இந்தியர்கள் எங்களை எப்படி ஆதரித்தார்கள் என்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் யார் , எங்கிருந்து வருகிறீர்கள் என்பது குறித்து அவர்கள் கவலைப்படவோ மாட்டார்கள். இந்தியர்களின் அன்பு அவ்வளவு தூய்மையானது. அவர்கள் போலியானவர்கள் இல்லை என்றும் அவர்களது அன்பால் எனது இன்பாக்ஸ் முழுவதும் நிறைந்துவிட்டது என பெருமிதம் தெரிவிக்கிறார் கிலி பால்.






கிலி பால் நிறைய இந்தி படங்கள் பார்த்திருக்கிறாராம் ஆனாலும் தனக்கு பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்கிறார். சல்மான் கான், ஹிரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெரீப்  கிலி பாலுக்கு மிகவும் பிடித்த நடிகர்களாம். அதே போல நீமாவிற்கு மாதுரி தீக்‌ஷித் மற்றும் ஹிரித்திக் ரோஷன் என்றால் மிகவும் பிடிக்குமாம். இது போல இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதற்கு அப்பகுதி மக்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது என கேட்டதற்கு , இங்கு யாருக்கும் சோஷியல் மீடியா குறித்தெல்லாம் தெரியாது. அவர்கள் மாடு மேய்ப்பது விவசாயம் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்வார்கள் . நாங்கள் இருவரும்தான் இதை விருப்பத்துடன் செய்து வருகிறோம். என தெரிவிக்கும் கிலி பாலை விரைவில் பாலிவுட் திரையில் காண வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.