Ponniyin Selvan: பொன்னி நதி பாடல் படப்பிடிப்பு வீடியோ... அசத்தல் காட்சிகளுடன் வெளியானது!

கடந்த ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக “பொன்னி நதி” வெளியானது. சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜெயம் ரவி, ஜெயராம், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Continues below advertisement

பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள பொன்னி நதி பாடலின் படப்பிடிப்பில் என்ன நடந்தது ? என்பது குறித்த வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Continues below advertisement

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அந்த வகையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக “பொன்னி நதி” வெளியானது. சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜெயம் ரவி, ஜெயராம், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.தொடர்ந்து இப்பாடல்  2  நாட்களில் ஒரு கோடி பார்வைகளை பெற்றுள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்தது. 

இந்நிலையில் பொன்னி நதி பாடல் பாடலின் படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பது குறித்த வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பொன்னி நதி பாடல் படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பது குறித்து நடிகர் கார்த்தியும், டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவும் பேசுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. மேலும் படத்தில் தன்னுடன் நடிக்கும் குதிரை கூட தன் பேச்சை கேட்கவில்லை என கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola