மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டிருந்தார். இந்தச் சூழலில் நேற்று இரவு திடீரென்று உத்தவ் தாக்கரே தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 


இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “1975 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள். 1975ஆம் ஆண்டு மக்கள் தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயணனின் வார்த்தைகள் அதிகாரவர்க்கத்தை ஆட்டியது. அதன்பின்னர் 2020 ஆம் ஆண்டு நான், “ மக்களாட்சி ஒரு சத்தியம். அந்தச் சத்தியத்தை உடைப்பவர்கள் நிச்சயம் அழிந்துவிடுவார்கள்” என்று கூறினேன். அதேபோல் சிவனின் 12-வது அவதாரமாக ஹனுமான் கருதப்படுகிறார். ஹனுமானின் சாலிசாவை பாட அனுமதி வழங்காத சிவசேனாவை சிவனால் கூட காப்பாற்ற முடியாது” எனக் கூறியுள்ளார். 






கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பையில் இருந்த நடிகை கங்கனா ரனாவத்தின் இல்ல அலுவலகம், ஆக்கிரமிப்பு காரணங்களை சுட்டி  இடிக்கப்பட்டது. அப்போது மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக கங்கனா ரனாவத் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்ததால் இந்த சம்பவம் நடந்தது என்று குற்றச்சாட்டு எழுந்தது. கங்கனா ரனாவத்தும் இது தொடர்பாக அப்போது கருத்து தெரிவித்து வந்தார். இந்தச் சூழலில் தற்போது சிவசேனா அரசு ஆட்சியை இழந்தவுடன் அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண