• நகைச்சுவை பட்டாளத்துடன் மீண்டும் ஹீரோவாக ரீஎண்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி!


ஹீரோவாக கவுண்டமணி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.   'ஒத்த ஓட்டு முத்தையா' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை, எதிர்நீச்சல் ஜான்சி ராணி, கூல் சுரேஷ், சென்றாயன், சதீஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சாய் ராஜகோபால் இயக்கும் இந்த படத்தை ஷஷி பிலிம்ஸ் தயாரிக்கிறது. சித்தார்த் விபின் இசை அமைக்கிறார். 



  • வேட்டைக்கு தயாராகும் கேப்டன் மில்லர்.. டீசர் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு..!


நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன்,  கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் டீசர் ஜூலை 28 ஆம் தேதி தனுஷ் பிறந்தநாளன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • மாவீரன் பட வசூல்.. கெட்ட வார்த்தையில் திட்டிய ப்ளூ சட்டை மாறன்.. கொந்தளித்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள்


நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் தொடர்பான வசூல் குறித்து வெளியான தகவலுக்கு பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார்.  மடோன் அஸ்வின் இயக்கிய அப்படத்தில்  அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், சுனில் குமார், பாலாஜி சக்திவேல், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்த நிலையில் ஜூலை 14 ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த படம் இதுவரை ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 




  • கோயிலுக்கு பயணம்.. புர்கா அணிந்து சென்ற சுவாதி.. இணையத்தில் ரசிகர்கள் கருத்து மோதல்.. 




கோயிலுக்கு செல்ல புர்கா அணிந்து சென்ற பிரபல நடிகை சுவாதிக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு, எதிர்ப்பு கருத்துகள் எழுந்துள்ளது. தமிழில் சுப்பிரமணியபுரம், போராளி, யாக்கை, வடகறி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தற்போது திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகி விட்டார். தற்போது கோயிலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் புர்கா அணிந்து சென்ற வீடியோவை சுவாதி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 



  •  விஜயின் 'நான் ரெடி' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் பிரபலம்... வைரலாகும் வீடியோ!


நடிகர் விஜயின் நான் ரெடி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் பிரபலத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்து இருக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நான் ரெடி'  பாடல், விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகி ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.