90’ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான படங்களை எவர் க்ரீன் கன்டென்டாக கொடுப்பதில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது வால்ட்-டிஸ்னி. 1937ஆம் ஆண்டில், ஸ்னோ வைட் அண்ட் தி ட்வார்ஃப்ஸ் படத்தின் மூலம் ஆரம்பித்த இவர்களின் பயணம், இன்று ப்ளாக் பாந்தர் வரை வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கின்றது. உலகில் அதிக வசூல் செய்யும் திரைப்படங்களுள், டிஸ்னியின் படைப்புகள் பல இடம்பெற்றிருக்கும். சமீபத்திய காலமாக, படங்கள் மட்டுமன்றி தொடர்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது டிஸ்னி. 




பொம்மை படங்கள் என்றால், அனைவருக்கும் கொள்ளை பிரியம் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால்,வால்ட் டிஸ்னி எடுக்கும் அனிமேஷன் படங்கள், குழந்தைகள் மட்டுமன்றி, அனைத்து வயதுடையோரையும் தன்வசம் இழுக்கும் திறன் கொண்டது. லிட்டில் மர்மைட், ப்யூடி அன்ட் த பீஸ்ட், அலாதீன், சின்ட்ரெல்லா உள்ளிட்ட படங்கள் உலகப்புகழ் பெற்றவை. அனிமேஷன் வடிவில் மட்டுமே தயாரிக்கப்பட்ட இவ்வகையான திரைப்படங்களை, சிறிது பட்டி-டிங்கரிங் பார்த்து நிஜ மனிதர்களை வைத்து எடுத்தது வால்ட் டிஸ்னி நிறுவனம். க்ராபிக்ஸ் காட்சிகள், பிரமாண்ட செட் என வேறு சில அம்சங்களையும் இணைத்து, அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் வகையில் படங்களை எடுக்க துவங்கியது டிஸ்னி. 






எலிமெண்டல் பட டீசர்:


டிஸ்னி உலகிற்கு, இதுவரை இல்லாத ஒரு உலகை உருவாக்குவது ஒன்றும் புதிததல்ல. அப்படி ஒரு புது உலகைத்தான் எலிமன்டல் படம் மூலம் உருவாக்கியுள்ளனர். இப்படத்தின் டீசரில் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி உள்ளிட்ட ஐம்புலன்களுக்கான உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மனிதர்கள் மெட்ரோவில் பயணிப்பது போல வானமும் செடி கொடிகளும் பயணிக்கின்றன. இதில், முக்காடு போட்டுக்கொண்டு பயணிக்கும் நெருப்புக்கும், உடன் பயணிக்கும் நீருக்கும் ஹெட்ஃபோன்ஸை எடுத்துக் கொடுக்கும் கேப்பில் காதல் பற்றிக் கொள்கிறது. வழக்கம் போல், Opposites attract each other எனும் கான்செப்டை கொண்டுள்ளதாக இருக்கிறது எலிமன்டல் படம். 




ரலீஸ் எப்போது?


“நெருப்பும் நீரும் மோதிக்கொள்கையில் காதல்” என்பதை மையக்கருத்தாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், எம்பர் எனும் கதாப்பாத்திரம்தான் நெருப்பு பெண்ணாக வருகின்றது. இந்த கதாப்பாத்திரத்திற்கு லியா லூயிஸ் வாய்ஸ் கொடுத்துள்ளார். நெருப்பைக் காதலிக்கும் நீராக நடித்துள்ள கதாப்பாத்தித்தின் பெயர் வேட். இந்த கதாப்பாத்திரத்திற்கு, மாமோட் அதி (Mamoudou athie) என்பவர் வாய்ஸ் கொடுத்துள்ளார். இப்படம், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளது.