விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்டவர்களை கண்டுபிடிக்க படக்குழு மிகத்திவீர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஜனநாயகன் படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ் படத்தை இணையத்தில் கசியவிட்டதாக குற்றசாட்டுகள் எழுந்து வரும் நிலையில் தென் இந்திய படத்தொகுப்பாளர் சங்கம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது
எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக ஜன நாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. சென்சார் பிரச்சனையால் ரிலீஸூக்கு காத்திருந்த இப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டது. முதலில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வெளியான நிலையில் நள்ளிரவில் முழு படமும் வெளியிடப்பட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது.
ஜனநாயகன் படத்தை கசியவிட்டது யார் ?
ஜனநாயகன் படத்தை யார் வெளியிட்டது என்கிற ஒன்றே அனைவரது கேள்வியாகவும் உள்ளது. சிலர் படத்தை தணிக்கை செய்தவர்கள் தரப்பில் இருந்து படம் கசிந்ததாக கூறி வருகிறார்கள். ஆனால் சென்சார் போர் தரப்பில் இருந்து படம் கசிந்திருந்தால் வெளியான படத்தில் டைம்கோட் அல்லது சென்சார் பிரதி வாட்டர்மார்க் இடம்பெற்றிருக்கும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள பிரதியில் எடிட் ரெஃபரன்ஸ் என வாட்டர்மார்க் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ் இந்த படத்தை இணையத்தில் கசியவிட்டுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து தற்போது தென் இந்திய தயாரிப்பாளர் சங்கம் சார்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
படத்தொகுப்பாளர் மீது பழி சொல்லாதீர்கள்
தென் இந்திய படத்தொகுப்பாளர் சங்க தலைவர் கோபி இன்று பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் " எடிட்டர் பிரதீப் இ ராகவ்வுக்கு இந்தக் கசிவில் எந்தத் தொடர்பும் இல்லை. தணிக்கைத் தாமதத்திற்குப் பிறகு, இயக்குனர் எச். வினோத் படத்தில் மேலும் சில திருத்தங்களை செய்யத் திட்டமிட்டிருந்தார். இதனால் ஜனவரி 14 அன்று, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரின் முறையான ஒப்புதலுடன், சிஜி வேலை மற்றும் ஒலி கலவைக்காக ஒரு பிரதி அதிகாரப்பூர்வமாக ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவுக்கு அனுப்பப்பட்டது. ஸ்டுடியோவில் போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளின் போது பல தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் ஈடுபட்டிருந்ததால், இந்தக் கசிவு அங்கிருந்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறு பரிசீலிக்கப்படுகிறது.
ஜனநாயகன் வெளியே கசிந்ததில் மிகவும் வருத்தப்படுகிறோம். நம்பிக்கையின் அடிப்படையிலேயே எங்கள் பணி உள்ளது. எங்கள் தரப்பில் படம் கசிய விடப்படவில்லை, படத்தின் எடிட்டர் மீது சந்தேகம் கொள்வது வருத்தமளிக்கிறது. உண்மை தெரியும் வரை யாரையும் பழி சொல்லாதீர்கள்" என தெரிவித்துள்ளார். " என்று கூறினார்
