கொரோனாவின்  இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. அதனால் திரையரங்குகள் மறு அறிவிப்பு  வரும் வரை மூடப்பட்டுள்ளது. மீண்டும் திறக்கப்படுவது தற்போதைய சூழலில் சாத்தியம் இல்லை என்பதால் , திரையரங்குகளில்  திரையிடுவதற்காக காத்திருந்த படங்களை  OTT தளத்தில் வெளியிடுவதற்கான முயற்சியில் படக்குழுக்கள் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 


இதில் விஜய்சேதுபதியின் இரண்டு படங்களை வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைப்பெற்று வருவதாக தெரிகிறது. விஜய் சேதுபதிக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மலையாள ரசிகர்களும் அதிகம் . இந்நிலையில் அவர் நடிப்பில் கேரளாவில் வெளியீட்டிற்கு  தயாராக இருந்த 19(1)(a) என்ற திரைப்படம் தற்பொழுது OTT தளத்தில் வெளியிடுவதற்கான முயற்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்தியா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தினை வி.எஸ். இந்து இயக்கியுள்ளார்.
மேலும் அவரின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "துக்ளக் தர்பார்" படமும் OTT தளத்தில் வெளியிட இருப்பதாக தெரிகிறது.





இதேபோல்  நடிகர் தனுஷின் மாறுபட்ட நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்   உருவாகியுள்ள "ஜகமே தந்திரம்" திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த திரைப்படம் அடுத்த மாதம் 18 ஆம் தேதி வெளியாக உள்ளது . இது தனுஷின் 40 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.



இதுதவிற பெண்களை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ள இரண்டு படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார்களாம். 


முதலில்   லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில்  உருவாகியுள்ள "நெற்றிக்கண் " திரைப்படம்.  இந்த திரைப்படத்தில் நயன்தாரா பார்வை குறைபாடு உள்ள பெண்ணாக நடித்திருக்கிறார். இந்த படத்தினை நயன்தாராவின் நெருங்கிய நண்பரான விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க த்ரில்லரான கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதுவும் அமேசான் போன்ற ஓடிடி தளங்களில் வெளியிட  முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. நெற்றிகண் என்ற பெயரில் ஏற்கனவே ரஜினியின் திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.




அடுத்தாக  த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள "ராங்கி" திரைப்படம் , இந்த திரைப்படத்தில் த்ரிஷா மிரட்டலான அதிரடி சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளாராம். 


இது தவிற  சிவா நடிப்பில் , நகைச்சுவை படமாக எடுக்கப்படுள்ள "சுமோ" திரைப்படத்தையும் ஓடிடியில் வெளியிட இருக்கிறார்களாம். விரைவில் இப்படங்களில் வெளியீட்டு தேதி மற்றும் தளங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.