மலையாளம், தமிழ், தெலுங்கு என நடித்து வரும் துல்கர் “கர்வான்” என்ற ஹிந்தி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அவரின் அழகாலும் நடிப்பாலும் கன்னிப் பெண்களை கவர்ந்த துல்கர், சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுப் என்ற ஹிந்தி படம் மூலம் பாலிவுட் உலகில் களம் இறங்கியுள்ளார். சன்னி டியோல், ஸ்ரேயா தன்வந்திரி மற்றும் பூஜா பட் நடித்துள்ள இப்படம் நாளை மறுநாள் ஆகிய செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நெகடிவ் விமர்சனங்கள் கொடுக்கும் திரை விமர்சனர்களை தேடி தேடி வெறிகொண்டு கொல்லும் ஒரு கொலையாளியின் வாழ்வை மையமாக கொண்டது இப்படத்தின் கதைகரு.
படம் 23 ஆம் தேதி ரிலீஸாகவிருந்தாலும், அதற்கு முன்பே ஆடியன்ஸ்களுக்கான இலவச சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்து, பாசிடீவான விமர்சனங்களை மக்கள் கொடுத்து வருகின்றனர். என்னடா படத்திற்கு முன்பாகவே ப்ரொமோட்ஷனுக்காக இப்படி செய்கிறார்களா..என்றும் சிலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.
ப்ரொமோஷனுக்காக இது செய்யப்பட்டால், பட விமர்சகர்களை அழைத்து, பொய் விமர்சனம் எழுதி இருக்கலாம். ஆனால், இணையத்தில் தெறிக்கும் விமர்சனங்கள் அனைத்துமே மக்களின் கருத்தாகும். இப்படி பட ரிலீஸுக்கு முன்னரே, படத்தை இலவசமாக அதுவும் மீடியா காரர்களுக்கு இல்லாமல் மக்களுக்கு திரையிடுவது இதுவே முதன் முறை ஆகும். இந்த படம், சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் என மொத்தமாக 11 நகரங்களில் திரையிடப்பட்டுள்ளது.
துல்கர் இப்படத்தில் நன்றாக நடித்துள்ளதாகவும், இப்படமானது காலத்திற்கு ஏற்ற கதையை கொண்டதாகவும் பலர் கூறிவருகின்றனர். சீதா ராமம் படத்தை பார்த்த ஹிந்தி பட ரசிகர்களிடம் இருந்து, துல்கர் சல்மான் நல்ல வரவேற்பை பெற்றார்.
சீதா ராமத்தில் பார்த்த துல்கர் சல்மானுக்கும் சுப் படத்தில் நடித்து இருக்கும் துல்கருக்கும் பயங்கரமான வேறுபாடு உள்ளது என்றும், தன் நடிப்பினால் சுப் படத்தில் வரும் கதாப்பாத்திரத்தை செதுக்கியுள்ளார் என்றும் பேசப்படுகிறது.
சுப் படத்தின் ட்ரைலர் :
பாசிடீவ் ரெஸ்பான்ஸை அடுத்து, சுப் படத்திற்கான டிக்கெட் பதிவு மும்மரமாக நடந்து வருகிறது. அனைத்து டிக்கெட்டுகளும் சீக்கரமாக விற்று வருகிறது. அதுபோக, திரையரங்குகளில் சுப் படமானது கூடுதலான ஷோக்களுடன் திரையிடப்படவுள்ளது.