2019 ஆம் ஆண்டு கார்த்தி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் கைதி. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்தது. தமிழில் வெற்றியைத் தொடர்ந்து இந்தி மற்றும் மலேசிய மொழியில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் போலா என்கிற டைட்டிலில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் ரீமேக் உடன்படிக்கையில் கூறப்பட்ட நிபந்தனைகளை போலா பட தயாரிப்பு நிறுவனம் மீறியுள்ளதாக ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது
மாநகரம் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமாக 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு கைதி திரைப்படம் வெளியானது. விஜயின் பிகில் படத்துடன் வெளியான போதும் கைதி திரைப்படம் வசூலை குவித்து ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. இப்படத்தின் ரீமேக் உரிமத்தை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியது. கைதி படத்தின் மூலக் கதைகயில் சில மாற்றங்களை செய்து மிகப்பெரிய மாஸ் ஆக்ஷன் திரைப்படமாக இந்தியில் போலா திரைப்படம் உருவானது. தற்போது இப்படத்தின் ரீமேக் உரிமை ஒப்பந்த விதிகளை போலா பட தயாரிப்பாளர்கள் மீறியுள்ளதாக கைதி பட தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
குற்றசாட்டுக்கள்
ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக போலா பட தயாரிப்பு நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
- ரீமேக் செய்ய வழங்கப்பட்ட அனுமதியை கடந்து மூலக் கதையை சிதைக்கும் விதமாக மாற்றங்கள் செய்துள்ளார்கள்.
- கைதி என்கிற குறிப்பிட்ட கதையை ரீமேக் செய்வதற்கான அனுமதி மட்டுமே ரீமேக் ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் போலா படக்குழுவினர் கைதி படத்தின் அடுத்தடுத்த பாகம் மற்றும் லோகேஷ் சினிமேட்டிக் யுவிவர்ஸ் தொடர்பான அம்சங்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியுள்ளார்கள்.
- ஒப்பந்த விதிகளை மீறியதால் அசல் படத்தின் தயாரிப்பாளர்களுக்கான ராயல்டி தொகை வந்து சேரவில்லை
- நிஜ கதையின் படைப்பாளியின் அனுமதியின்றி படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை படத்தை தாண்டி பயண்படுத்தியுள்ளார்கள்.
கைதி 2
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 திரைப்படம் நீண்ட நாள் காத்திருப்பில் இருந்து வருகிறது. கூலி படத்தைத் தொடர்ந்து கைதி 2 படத்தை லோகேஷ் இயக்கவிருந்தார். இதனிடையில் அவர் தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். அடுத்த ஆண்டு கைதி 2 படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்
