அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த  டிராகன் படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 


ரிலீஸானது டிராகன்:


கோமாளி , லவ் டுடே என அடுத்தடுத்த இரு பெரிய ஹிட் படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் . ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து டிராகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட்  தயாரித்துள்ளது. இந்த படத்தில் கயாடு லோஹர், அனுபாமா பரமேஷ்வரன், ஜார்ஜ் மேரியன், இந்துமதி மணிகண்டன், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான், சபரி பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


இதையும் படிங்க: NEEK Movie Review : காவியமா..? கிரிஞ்சா..? தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் பட விமர்சனம் இதோ


முதல் விமர்சனம்: 






இந்த படமானது டான் படத்தின் சாயலில் இருப்பதாக டிரெய்லர் வெளியானவுடன் ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இது அந்த படம் கிடையாது என்பதை மறுத்தார். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த முதல் விமர்சனத்தை கொடுத்தது வேறு யாரும் இல்லை நடிகர் சிம்பு தான். படம் பிளாக்பஸ்டர் என்று தனது டிவிட்டரில் நடிகர் சிம்பு பகிர்ந்துள்ளார். மேலும் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை பகிர்ந்து வருகினறனர். 






படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு முந்தைய படங்களைக்காட்டிலும்  மெருகேறி  இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 






டிராகன் படத்தை அமெரிக்காவிலிருந்து பார்த்த ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில் அமெரிக்காவிலிருந்து முதல் பாதி விமர்சனம் . படம் எந்த ஆச்சரியங்களுடனும் நன்றாகப் போகிறது. பிரதீப்ரங்கநாதன் இதுவரை பரவாயில்லை. படத்தின் கதை யூகிக்கக்கூடியதாக இருந்தாலும்  படம் அவ்வளவு சலிப்பை ஏற்படுத்தவில்லை. வி.ஜே.சித்து நகைச்சுவை என்பது கிரிஞ்ச் ஆக இருப்பது படத்தின் மிகப்பெரிய குறைபாடு. இரண்டாம் பாதி நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.