Doctor Movie Box Office Collection: கோலமாபு கோகிலா என்னும் வெற்றி படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் படைப்பில் வெளியான திரைப்படம் ; டாக்டர்’ .சிவகார்த்திகேயன் தனது SK புரொடக்‌ஷன்  நிறுவனம் சார்பில் இந்த படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க யோகி பாபு, வினய் உள்ளிட்டோர் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். மனித கடத்தலை மையமாக வைத்து டார்க் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


இந்நிலையில் படம் உலகம் முழுவதும் உள்ள திரையங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இதுவரை 440000 டாலர் அளவில் வசூல் செய்து சாதனை  படைத்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பீட்டில் கிட்டத்தட்ட  33,126,148 ரூபாயாகும் . இதுவரையில் அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமை டாக்டர் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. டாக்டர் படத்தின் வசூல் விரைவில் 100 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை சிவ கார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக விஜயின் மாஸ்டர் திரைப்படம் 43900 டாலர் வசூலித்த நிலையில் அந்த வசூல் சாதனையை டாக்டர் தற்போது முறியடித்துள்ளது.




வசூல் குறித்து வெளியான தகவலின்படி, தமிழ்நாட்டில் மட்டும் டாக்டர் திரைப்படம் ரூ.41 கோடி வசூல் செய்துள்ளது. மற்ற இடங்களில் வசூலையும் சேர்த்து மொத்தமாக ரூ.60 கோடியை வசூல் செய்துள்ளதாம் டாக்டர். இதனால் டாக்டர் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் ரூ.100 கோடியை டாக்டர் நெருங்கும் எனத் தெரிகிறது.


இயக்குநர் நெல்சன் தற்போது விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். டாக்டர் படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி , பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. முன்னதாக பீஸ்ட் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் படம் தங்க கடத்தலை மையமாக வைத்து உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியானது. டாக்டர் படத்தின் புரமோஷனில் கலந்துக்கொண்ட இயக்குநர் நெல்சன் பீஸ்ட் அப்டேட் குறித்து கேட்ட கேள்விக்கு, டாக்டர் படம் வெளியானதும், பீஸ்ட் அப்டேட் கொடுப்போம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.