இந்த காலத்தில் ஒரு மனைவியை கட்டிக்கொண்டே சமாளிப்பது கடினமாக உள்ளது என ஆண்கள் புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில் 8 மனைவிகளுடன் தன்னுடைய தாத்தா ஒரே வீட்டில் குடும்பம் நடத்தியதாக எம் ஆர் ராதாவின் பேரன்களில் ஒருவரான வாசு விக்ரம் கூறிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சென்னையில் பிறந்து வளர்ந்த எம் ஆர் ராதா (மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன்) 1930 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரையில் 50 ஆண்டுகள் சினிமாவில் நடித்த லெஜெண்ட் நடிகர் ஆவார். ஏராளமான தத்துவங்களை, நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்துவதில் வல்லவர். சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்த இவர்... மேடை நாடகங்களுக்கு எப்போதும் முக்கியத்தும் கொடுப்பவர். எம் ஆர் ராதா தனது 10ஆவது வயது முதலே மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சுமார் 5000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு சென்னை தேனாம்பேட்டையில் மிக பிரமாண்டமான பங்களா இருந்த நிலையில், அங்கு தனது 8 மனைவிகளுடன் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்து வந்தாராம். இதற்க்கு முக்கிய காரணம் தன்னுடைய 8 மனைவிகளையும் அவர் ஒரு போதும் வேறுபடுத்தி பார்த்ததில்லை. அப்போதே  ஆளுக்கு 100 - 100 பவுன் போட்டு அழகு பார்த்தவர். 

சினிமாவை பொறுத்தவரை எம் ஆர் ராதாவிற்கு என்றுக்கு தனியாக கதாபாத்திரம் அமைக்கப்பட்டு டயலாக்குகளும் எழுதப்படுமாம். அவ்வளவு முக்கியத்தும் கொண்ட நடிகராக கொடி கட்டி பறந்தவர். சிவாஜி கணேசன், எம்ஜிஆருக்கு வில்லனாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதே போல் மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர். பெரியாரின் தீவிர பக்தர்.

எம்ஜிஆர் மீது துப்பாக்கி சூடு நடத்திய வழக்கில் எம் ஆர் ராதாவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு அவரது சிறை காலம் 4 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. சிறையிலிருந்து வெளியில் வந்த அவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருச்சியில் வாழ்ந்து வந்த அவர் 72 வயதில் காலமானார்.

எம் ஆர் ராதாவிற்கு 8 மனைவிகள் மூலம் மொத்தம், 20 குழந்தைகள் இருந்ததாக சொல்லப்படும் நிலையில்... பல பேரக் குழந்தைகளும் இருந்துள்ளனர். அதில் வாசு விக்ரமும் ஒருவர். இவர் தனது தாத்தா எம் ஆர் ராதா குறித்து பேசிய வீடியோ, ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதுகுறித்து பேசியுள்ள அவர், என்னுடைய அப்பாவின் நடிப்பு தாத்தாவிற்கு மிகவும் பிடிக்கும். அதே போன்று தான் அப்பாவுக்கு தாத்தாவைத் தான் அதிகம் பிடிக்கும். தாத்தா இறந்த பிறகு அவரை வீட்டிலுள்ள தோட்டத்தில் தான் நாங்கள் புதைத்தோம். அப்போதிலிருந்து அப்பா வீட்டிற்குள் வரவில்லை. தோட்டத்திலேயே தங்கிவிட்டார். 2 மாதங்களுக்கு பிறகு அவரை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் தூக்கி வந்தோம். சென்னை தேனாம்பேட்டையில் இருந்த வீட்டில் தாத்தா 8 மனைவிகளுடன் வாழ்ந்தார். அந்த 8 மனைவிகளுக்குமே தாத்தா சரிசமமாக நிலங்களை பிரித்து கொடுத்தார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வீட்டில் தான் இருப்பார்.

பேரக் குழந்தைகளுடன் தான் நேரம் செலவிடுவார். ஆனால், அவருக்கு நாங்கள் யாருடன் மகன் அல்லது மகள் என்றே தெரியாது. அவர், நீ யாருடைய மகன் என்று எங்களை கேட்பார். அதன் பிறகு எங்களை கொஞ்சுவார். அனைவர் மீதும் எந்த ஒரு பாகுபாடும் இன்றி பாசத்தை காட்டியவர் என் தாத்தா என உருக்கமாக பேசியுள்ளார்.