மேலும் அறிய

Vijay vs Seeman: ஒரு படம் கூட உருப்படி இல்லை என விமர்சனம்.. சீமானுக்கு பிடித்த விஜய் படங்கள் என்னென்ன தெரியுமா?

முதலமைச்சர் விஜய் 69 படத்தில் ஒரு படம் கூட நல்ல படம் இல்லை. இந்த மக்கள் நல்ல படம் தராதவனை நல்லாட்சி தருவான் என நம்புகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் தமிழ் சினிமாவில் ஒரு படம் உருப்படியாக நடிக்கவில்லை என விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வீடியோ ஒன்றின் மூலம் தவெகவினர் பதிலடி கொடுத்துள்ளனர். 

விஜய் மீது சீமான் வைக்கும் விமர்சனம்

2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்து விஜய் முதலமைச்சரானார். இந்த தேர்தலில் தவெகவின் வெற்றி என்பது திமுக, அதிமுக என்ற ஆண்ட கட்சிகளை அலற வைத்தது. அதேசமயம் விஜய் ரசிகர்களையும் சேர்த்து இளைஞர் பட்டாள வாக்குகளை கடந்த 10 ஆண்டுகளாக பெற்று வந்த நாம் தமிழர் கட்சிக்கு பேரிடியாக அமைந்தது. இதனால் விஜய் மீது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கோபத்தில் உள்ளார். தனது பேட்டிகள், மேடை நிகழ்வுகளில் முதலமைச்சர் விஜயை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். 

இந்த நிலையில், “உங்களை மக்கள் தேர்வு செய்ததற்கு ஒரே ஒரு காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம். சினிமாவில் நடித்ததை தவிர வேறு ஏதாவது காரணம் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். 69 படத்தில் ஒரு படம் கூட நல்ல படம் இல்லை. இந்த மக்கள் நல்ல படம் தராதவனை நல்லாட்சி தருவான் என நம்புகிறார்கள். ரஜினிகாந்துக்கு சொல்லிக்கொள்ள 50 படம், கமல்ஹாசனுக்கு 100 படம், எம்ஜிஆருக்கு ஒழுக்கம், தாயைப் போற்றுவது, பெண்களை மதிப்பது, மது அருந்த மாட்டேன் என வலியுறுத்த  200 பாட்டுகள் இருக்கிறது. ஆனால் தம் அடிக்கிற ஸ்டைலைப் பார்த்து தனலட்சுமி விரும்புச்சுன்னு நீ பாட்டு பாடிட்டு திரியுற.. இதில் கோவப்படுவதற்கு என்ன இருக்கிறது சிஎம் சார்?” என நிகழ்ச்சி ஒன்றில் சீமான் விமர்சித்திருந்தார். 

சீமானுக்கு பிடித்த விஜய் படங்கள்

இதனிடையே, ஒரு விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சீமான் பங்கேறிருப்பார். அப்போது அவரிடன் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், விஜய் நடித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்ற கேள்வியை கேட்பார்கள். அதற்கு, “விஜய் நடித்ததில் மெர்சல் படம் பிடித்தது. அதேபோல் பிகில் படத்தில் ஆசிட் வீச்சால் வீட்டில் முடங்கியிருக்கும் பெண்ணை வாசலில் உட்கார்ந்து பேசி வெளியே வரவைக்கும் அந்த காட்சி எனக்கு எப்போதும் பிடிக்கும்” என தெரிவித்திருப்பார். இந்த வீடியோ இப்போது விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். 

Also Read: புகழை விட தன்மானமே முக்கியம்...ஜான்வி கபூருக்கு நித்யா மேனன் செம அடி

மேலும் சீமான் ஒருபோதும் ஒரே மாதிரியான கருத்தில் உடன்பட மாட்டார். ஒருமுறை தம்பி விஜய் என்பார், மறுபுறம் ஒரு படம் கூட உருப்படியா நடிக்கலையான்னு கேட்பார். அதைப் பற்றி கேட்டால் என் தம்பியை விமர்சிக்க உரிமை இல்லையா என அதனை மடைமாற்ற முயற்சிப்பார் என தவெகவினர் கடுப்பாகியுள்ளனர்.  

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
Embed widget