தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ராஜேஷ். திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மூச்சு திணறல் காரணமாக மே 29-ஆம் தேதி உயிரிழந்தார். 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, கன்னி பருவத்திலேயே படத்தின் மூலமாக ஹீரோவாக மாறியவர் தான் ராஜேஷ். பின்னர் ஏராளமான படங்களில், பல்வேறு குணச்சித்திர வேடத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

 தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் பிறந்திருந்தாலும், இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்து, சென்னை பச்சையப்பாஸ் கல்லூரியில் தான். பின்னர் சென்னையிலேயே ராஜேஷ் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் சினிமா வாய்ப்புகளை கைப்பற்றி நடிக்க துவங்கினார். ராஜேஷின் நெருங்கிய உறவினர் தான், முள்ளும் மலரும் திரைப்படத்தின் இயக்குனர் மஹேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜேஷை தொடர்ந்து, அவரின் தம்பி சத்யனும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது புனிதா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார். தன்னுடைய ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்ட நபராகவே இருந்த ராஜேஷ், திடீர் என இறந்தது, ஒட்டு மொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. 

ராஜேஷ் உயிருடன் இருக்கும் போதே... தனது கல்லறையில் என்ன வசனம் இருக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்து அதை ஒரு கிரானென்ட் கண்ணிலும் செதுக்கி வைத்துள்ளார். அதே போல் 40 வயதிலேயே தனக்கான கல்லறையை அவர் கட்டி விட்டார். வால்ட் வைத்து கட்டப்பட்ட அந்த கல்லறையில் தான் தனது அப்பா, அம்மா மற்றும் மனைவி ஆகியோர் உடல் அடக்கம் செய்யப்பட்டதாம்.

இந்த நிலையில் ராஜேஷ் கல்லறையில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் Actor Rajesh The Legend Book of Tamil Cinema என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த ராஜேஷ் தனது மரணத்தை கூட முன்பே கணித்தும் வைத்திருந்தார் என்று அவரது நண்பர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.