நடிப்பு சக்கரவர்த்தி என்று சிவாஜி கணேசனை எல்லோரும் அழைப்பது உண்டு. சினிமாவில் நடிகர் திலகம் என்ற அடைமொழியோடு சாதனைகளை படைத்தவர் தான் சிவாஜி. எந்த ரோல் கொடுத்தாலும் அந்த கேரக்டராக மாறி, அதற்கேற்ப நடித்து பாராட்டும் பெற்றுவிடுவார். அவரது நடிப்புக்கு ஈடு இணை எந்த நடிகராலு முடியாது. தனது யதார்த்தமான நடிப்பின் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்தார். 


ஹீரோவாக ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் அதற்கேற்ப குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். ஒரு காலத்தில் அதிக சம்பளம் வாங்கியவர்களின் பட்டியலில் எம்ஜிஆருக்கு பிறகு 2ஆவது இடத்தில் இருந்த சிவாஜி கணேசனுக்கு நாளடைவில் குணச்சித்திர ரோலுக்கு தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளம் தான் பெற்றார். 



Sivaji Ganesan: படையப்பா படத்திற்கு சிவாஜி கணேசனுக்கு கனவில் கூட நினைத்து பார்க்காத சம்பளம்! எவ்வளவு தெரியுமா?


இவ்வளவு வேண்டும், அவ்வளவு வேண்டும் என்று கேட்க மாட்டாராம். அப்படி அவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த மாஸான படங்களில் படையப்பா, ஒன்ஸ் மோர், தேவர் மகன் ஆகியவை.
இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய், சிவாஜி, சிம்ரன் ஆகியோரது நடிப்பில் வெளியான படம் தான் ஒன்ஸ்மோர். இந்தப் படத்தில் அவருக்கு ரூ.100 அட்வான்ஸ் கொடுக்கப்பட்ட நிலையில் படத்தின் வியாபாரத்திற்கு பிறகு சிவாஜிக்கு ரூ.10 லட்சம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எஸ்ஏசி. இதே போன்று தான் கமல், சிவாஜி நடித்த தேவர் மகன் படத்தில் சிவாஜிக்கு ரூ.20 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் படம் முடிந்து வியாபாரத்திற்கு பிறகு தான் அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தான் சிவாஜி கணேசன் வாங்கிய அதிக சம்பளம். 


இந்த நிலையில் தான் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ராதாரவி, மணிவண்ணன், லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், நாசர் ஆகியோர் பலரது நடிப்பில் வெளியான படம் தான் படையப்பா. கிட்டத்தட்ட 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களில் படையப்பா படமும் ஒன்று. இந்தப் படத்தில் ஃபர்ஸ்ட் ஆஃப் மட்டுமே நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவருக்கு சம்பளம் எவ்வளவு என்று பேசப்படவில்லை. வழக்கம் போன்று தயாரிப்பாளரிடம் உங்களது விருப்பம் என்று கூறியிருக்கிறார்.  





ஆனால், மனதிற்குள் எப்படியும் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையில் தருவார்கள் என்று எண்ணிக் கொண்டாராம். தயாரிப்பாளரும் படம் முடிந்த பிறகு சம்பளத்திற்கான காசோலையை கொடுத்திருக்கிறார். அதனை பெற்றுக் கொண்ட சிவாஜி, வீட்டிற்கு சென்று மூத்த மகனிடம் கொடுத்துள்ளார். அவரோ அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனென்றால் படையப்பா பட்த்திற்காக அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.


ரூ.10 லட்சத்திற்கு பதிலாக தவறுதலாக கொடுத்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு தயாரிப்பாளரிடம் போன் போட்டு கேட்டிருக்கிறார். அதற்கு தயாரிப்பாளர் இல்லை இல்லை நாங்கள் சரியாகத்தான் கொடுத்திருக்கிறோம். உங்களுக்கு ரூ.1 கோடி சம்பளமாக கொடுக்க சொன்னது ரஜினி தான் என்று சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து மனதிற்குள் பூரிப்படைந்த சிவாஜி வாழ்நாளில் தான் வாங்கிய பெரிய தொகையை நினைத்து ஆனந்த கண்ணீர் விட்டாராம். 


தனக்கு இவ்வளவு பெரிய சம்பளம் கொடுக்க சொன்ன ரஜினிக்கு நன்றி தெரிவித்து கடிதமும் எழுதியிருக்கிறார். அதில் உண்மையில் ரஜினி மூத்த நடிகர்களை மதிக்க தெரிந்தவர் என்று பாராட்டு தெரிவித்திருக்கிறார். ரஜினியின் இந்த மனசு தான் அவரை 80 வயதிலும் சூப்பர் ஸ்டாராக கொண்டாட வைத்துள்ளது என்பது தலைவரின் ரசிகர்கள் கருத்து.