அந்த காலம் முதல் தற்போதைய AI தொழில்நுட்ப காலம் வரை, மக்களின் பொழுது போக்கு துறையாக இருக்கும் கலை துறையில், இசைக்கு மிக முக்கிய இடம் உண்டு. எந்த ஒரு திரைப்படம் என்றாலும், அந்த படத்தில் இடம்பெறும் BGM எனப்படும் பின்னணி இசைக்கும், பாடல்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.

Continues below advertisement

இந்திய சினிமாவில் ஆயிரக்கணக்கான பின்னணி பாடகர் - பாடகிகள் இருந்தாலும் ஒரு சிலரின் குரலுக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். தங்களுக்கு இருக்கும் டிமாண்ட் காரணமாக ஒரு சில பின்னணி பாடகிகள்... ஒரே ஒரு பாடல் பாட, 25 லட்சத்திற்கும் மேல் சம்பளமாக பெறுகிறார்கள். அந்த வகையில், இந்திய அளவில் அதிக சம்பளம் பெரும் டாப் 5 பாடகிகள் குறித்து சியாசத் மற்றும் பிற ஊடக அறிக்கைகளின்படி, வெளியிட்ட தகவலை பார்ப்போம்.

ஸ்ரேயா கோஷல்:

தென்னிந்திய திரையுலகை தன்னுடைய அழகிய குரல்வளதால் கட்டி போட்டவர் தான் ஸ்ரேயா கோஷல். ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ச ரி க ம ப போட்டியில் கலந்து கொண்டு கவனம் பெற்ற இவர், அந்த நிகழ்ச்சியில் வென்ற பின்னர் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் தேவதாஸ் படம் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார் . இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, போன்ற பிற மொழிகளிலும் பாட துவங்கினார். தமிழ் மொழி அவருக்கு தெரியாது என்றாலும், வார்த்தை பிசங்காமல் அழுத்தமான உச்சரிப்புடன் பாடக்கூடியவர். இதுவரை 5 தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ள இவர் தான், மிகவும் அதிக சம்பளம் வாங்கும் பின்னணி பாடகியாக உள்ளார். அதன்படி ஒரு பாடலுக்கு இவர் ரூ.25 லட்சம் முதல் ரூ.27 லட்சம் வரை சம்பளமாக வாங்குகிறாராம்.

Continues below advertisement

சுனிதி சவுகான்:

மேடையை தன்னுடைய காந்த குரலால் அதிர விடும் பாடகி தான் சுனிதி சவுகான். 41 வயதாகும் சுனிதி , ஹிந்தியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளனர். அதே போல் மற்ற மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தமிழில் இதுவரை 33 பாடல்களை பாடி இருக்கிறார். குறிப்பாக கில்லி படத்தில் இடம்பெற்ற ஷாலல்லா, வல்லவன் படத்தில் வல்லவா என்னை கொள்ளவா, நண்பன் படத்தில் இடம்பெற்ற இருக்கானா இடுப்பிருக்கானா... போன்ற பாடல்களை பாடி இருக்கிறார். பி டவும் சென்சேஷனல் பாடகியான சுனிதி, ஒரு பாடலுக்கு 20 முதல் 22 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார்:

நேஹா கக்கர்:

வசீகரமான குரலுக்கு சொந்தக்காரியான நேஹா கக்கர், பிரபல இந்திய பாடகர் டோனி கக்கரின் இளைய சகோதரி ஆவர். ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, தன்னுடைய திறமையை நிரூபித்த பின்னரே தற்போது முன்னணி பாடகியாக மாறினார். பாலிவுட் மற்றும் பஞ்சாபி மொழியில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள இவர், மிக குறைந்த வயதில் அதிக சம்பளம் வாங்கும் பின்னணி பாடகியாக உள்ளார். இவர் தான் பாடும் ஒரு பாடலுக்கு, 10 முதல் 15 லட்சம் வரை சம்பளமாக வாங்குகிறாராம்.

லதா மாங்கேஸ்கர்:

இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் தான் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர். மிக முக்கிய பின்னணி பாடகியாக அறியப்படும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி சாதனை படைத்தவர். தமிழ் உட்பட ஏராளமான 15-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். இவர் ஒரு பாடலுக்கு அதிகபட்சமாக 10 முதல் 12 லட்சம் வரை சம்பளமாக வாங்கி வந்தார் .

அல்கா யாக்னிக்:

தன்னுடைய ஆத்மார்த்தமான குரலுக்கு பெயர் போனவர் தான் அல்கா . 90 மற்றும் 2000 கால கட்டங்களில் பாலிவுட் திரையுலகில் அல்காவின் குரலுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. குறிப்பாக தில்வாலே துல்ஹானியா, லே ஜாயேங்கே மற்றும் குச் குச் ஹோதா ஹை, போன்ற படங்களில் அவர் பாடிய பாடல்கள் இப்போது வரை மிகவும் பிரபலம். இவர் ஒரு பாடல் பாடுவதற்கு, 9 முதல் 12 லட்சம் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.