இந்த தீபாவளியில் பெரிய ஸ்டார்களின் படங்கள் இல்லாதது ரசிகர்களின் பெரும் வருத்தமாக இருந்தது. பைசன் , டியூட் , டீசல் ஆகிய மூன்று இளம் நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு வெளியாகின. இதில் டீசல் படத்தை தவிர பைசன் மற்றும் டியூட் இரு படங்களும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றன. இரு படங்களும் தமிழ்நாட்டில்  சிறப்பான வசூலீட்டி வெற்றிபெற்றுள்ளது தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இரு படங்களும் என்ன வசூல் செய்துள்ளன என பார்க்கலாம் 

Continues below advertisement

டியூட் இறுதி வசூல்

ஓப்பனிங் முதல் நாளிலேயே டாப் கியரில் பறந்தது டியூட். அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் , மமிதா பைஜூ , சரத்குமார் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 6 நாட்களில் டியூட் திரைப்படம் உலகளவில் 100 கோடி வசூல் செய்தது. லவ் டுடே , டிராகன் , டியூட் என அடுத்தடுத்து மூன்று படங்களில் 100 கோடி ஹேட்ரிக் அடித்தார் பி.ஆர். தமிழ்நாட்டில் டியூட் படம் இறுதியாக 61.5 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பைசன் இறுதி வசூல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படம் கொஞ்சம் மெதுவாக ஓட்டத்தை தொடங்கினாலும் நின்று நிதானமாக களமாடியது. இயக்கம் , நடிப்பு , இசை என இப்படத்தின் அனைத்து அம்சங்களும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் முதல் ரஜினிகாந்த் வரை படத்தை முக்கிய நபர்கள் பாராட்டியுள்ளார்கள். தமிழ்நாட்டில் மட்டும் பைசன் திரைப்படம் 4 வாரங்களில் 51.6 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement