தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகை தீீபாவளி ஆகும். பொங்கல் போன்று தொடர் விடுமுறை நாட்கள் இல்லாவிட்டாலும், தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 

Continues below advertisement

தீபாவளி ரிலீஸ்:

தீபாவளி பண்டிகை என்றால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகம் உற்சாகம் அடைந்துவிடும். ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் இந்த பண்டிகை நாட்களில் வெளியாவது வழக்கம்.

ஆனால், இந்த தீபாவளி பண்டிகையில் பிரதீப் ரங்கநாதனின் டூட், துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய 3 படங்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் 3 பேரும் வளர்ந்து வரும் கதாநாயகர்கள் ஆவார்கள். இளைஞர்கள் மத்தியில் இவர்கள் பிரபலமானவர்கள் என்றாலும் குடும்பங்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் இவர்கள் இன்னும் மிகப்பெரிய அளவில் ஆழமாக பதிவாகவில்லை. 

Continues below advertisement

பெரிய நடிகர்கள் படங்கள் இல்லாத படம்:

மேலும், தீபாவளி பண்டிகை நாளில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது என்பது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்து இழுப்பதால் வருவாயும் அதிகரிக்கும் ஆகும். சிறிய பட்ஜெட் படங்கள், வளர்ந்து வரும் கதாநாயகர்களின் படங்கள் பெரியளவு ரசிகர்களை இழுப்பதற்கான வாய்ப்புகள் குறைவு ஆகும். அதேசமயம், படம் ரசிகர்களை கவர்ந்துவிட்டால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.

அதேசமயம், தீீபாவளி பண்டிகை நாட்களில் பெரிய நடிகர்களின் படங்களை பெரும்பாலும் ரசிகர்கள் விரும்புவார்கள். குறிப்பாக, தமிழில் உச்சநட்சத்திரமாக திகழும் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரில் ஒருவரது படங்களோ, அல்லது சூர்யா, விக்ரம், கார்த்திக் போன்றோரின் படங்களையோ மக்கள் எதிர்பார்ப்பது வழக்கம். 

அடுத்த தலைமுறை ஹீரோக்கள்:

ஆனால், எந்தவொரு பெரிய நடிகர்களின் படங்களும் இல்லாமல் முழுக்க முழுக்க இளம் நட்சத்திரங்களை கொண்டு உருவாகியுள்ள 3 படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாகியுள்ளது. இந்த படங்களின் வெளியீட்டை அடுத்த தலைமுறைக்கான கதாநாயகர்களை நோக்கி தமிழ் திரையுலகம் சென்றுவிட்டதை காட்டுகிறது. இதன் காரணமாக, இந்த படங்களுக்கு மாரிசெல்வராஜ், பா.ரஞ்சித் போன்ற இயக்குனர்களும், ஜெயம் ரவி, கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இனி அஜித் - விஜய் மோதலுக்கு நோ:

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களான ரஜினியும், கமலும் தொடர்ந்து நடிப்பார்கள் என்றாலும் விஜய் ஜனநாயகன் படத்துடன் திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். நடிகர் அஜித்தும் கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் அவரும் எதிர்காலத்தில் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொள்ள உள்ளார்.

அஜித்திற்கு கடைசியாக தீபாவளி பண்டிகைக்கு கடந்த 2015ம் ஆண்டு வேதாளம் படமும், விஜய்க்கு கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு பிகில் படமும் தீபாவளி பண்டிகைக்காக வந்த படங்கள். அதன்பின்னர், இவர்கள் இருவரின் படங்களும் கடந்த 6 ஆண்டுகளாக எந்த தீீபாவளிக்கும் வெளியாகவில்லை. இந்த தீபாவளி பண்டிகைக்கு பெரியளவு எதிர்பார்ப்பு இல்லாத சிறிய படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இந்த தீபாவளிக்கே ரிலீஸ் செய்யப்பட இருந்தது. ஆனால், தேர்தலை கருதி அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட உள்ளது.